இன்றைய தினப்பலன்கள் (21.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (21.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வியாபாரத்தில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் இலாபம் மேம்படும். தைரியத்துடன் பொது காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : திருப்தியான நாள்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : இலாபம் மேம்படும்.

ரிஷபம் :

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
கிருத்திகை : பாராட்டப்படுவீர்கள்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.

மிதுனம் :

தொழில் வளர்ச்சிக்கு துறை சார்ந்த வல்லுநர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களால் இலாபம் உண்டாகும். மனைவிவழி உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஆதரவு மேம்படும். சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவாதிரை : உதவிகள் சாதகமாகும்.
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.

கடகம் :

உறவினர்களிடையே புரிதல் உண்டாகும். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும். வெளிவட்டார நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
பூசம் : கவலைகள் தோன்றும்.
ஆயில்யம் : அனுகூலம் உண்டாகும்.

சிம்மம் :

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த திட்டம் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த பணிகள் நிறைவடையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : திட்டங்கள் நிறைவேறும்.
உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும்.

கன்னி :

கணவன், மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதிய நபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
உத்திரம் : மோதல்கள் விலகும்.
அஸ்தம் : இலாபம் உண்டாகும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

துலாம் :

வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். மாமன் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். நெருக்கமானவர்களுக்காக சில உதவிகளை செய்து மகிழ்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்
சித்திரை : அனுபவம் உண்டாகும்.
சுவாதி : விருப்பங்கள் நிறைவேறும்.
விசாகம் : மனக்கசப்புகள் குறையும்.

விருச்சிகம் :

சில செயல்களை செய்து முடிக்க அலைச்சல்கள் அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அனைவரையும் அனுசரித்து செல்லவும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தொழிலில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
கேட்டை : இடமாற்றம் ஏற்படலாம்.

தனுசு :

எந்த செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பொருளாதார நிலை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : உற்சாகம் ஏற்படும்.
பூராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திராடம் : மதிப்புகள் உயரும்.

மகரம் :

மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனதிற்கு நெருங்கியவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் செய்யும் புதிய முயற்சிகள் யாவும் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
உத்திராடம் : முடிவுகள் சாதகமாகும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.

கும்பம் :

உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். புத்திரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நன்மை அளிக்கும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
சதயம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.

மீனம் :

வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
உத்திரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.
ரேவதி : சிந்தனைகள் மேலோங்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...