நிலவோடு வா தென்றலே – விமர்சனம் – லதா சரவணன்

 நிலவோடு வா தென்றலே – விமர்சனம் – லதா சரவணன்

அலங்காரத் தேரின் சக்கரங்கள் கடவுளுக்காக சுழலும் நேரத்தில் சில நேரம் கடமைக்காகவும் சுழல்கிறது என்பதுதான் நிலவோடு வா தென்றலே, தென்றலாய், புயலாய், சூறாவளியாய், சுழல்கிறது அத்தியாயங்கள்.

அது சுமந்த கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள். சுயநல ஓவியத்தின் வரிவடிவம்தான் தினேஷ் கதாபாத்திரம். தன்னம்பிக்கையின் சுடரொளியாய் உமா.

நாவல் படிக்கும் போது நல்லதொரு நாடகம் பார்த்த நிறைவு அத்தனை எதார்த்தம் பொதிந்திருந்தது உமாவின் தந்தை டாக்டர் சுமித்ராவின் குடும்பம் ஒரு பெண்ணால் தன் மனதில் உள்ள எதையும் வெளிப்படையாக பேசக் கூடிய அளவிற்கு ஒரு உறவு அமைகிறது என்றால் அதை விட அவளுக்கு இன்பம் தருவது வேறு என்னவாக இருக்க முடியும் அப்படித்தான் சுமித்தராவின் குடும்ப உறுப்பினர்கள்.

அப்படிப்பட்ட மனிதர்களோடு உமாவின் வாழ்வு அமைய வேண்டும் என்பதை நாமும் எதிர்பார்க்கத் தொடங்கி விடுகிறோம். அதை பூர்த்தி செய்த ஆசிரியருக்கும் பாராட்டுக்கள்.

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் தன் காதலைப் புதுப்பித்துக் கொள்ளும் தினேஷ் போலத்தான் இன்று பலரும் அவர்களின் காதலில் அன்பைத் தாண்டி எதிர்பார்ப்புகளே நிறைந்து இருக்கிறது.

அன்னப்பறவை தண்ணீரையும் பாலையும் பிரிப்பதைப் போல அந்த போலிக் காதலை ஒதுக்கி உண்மையை உணர்ந்து தன் எதிர்காலத்தை உமா தேர்ந்தெடுப்பது பாராட்டுக்குரியது.

சாந்தியின் அறியாமைத் தவறும் நாகரீகமும் என்ற பெயரிலும் நம்பிக்கை என்ற பெயரிலும் பிள்ளைகளையும் சமூகத்தையும் எந்த அளவிற்கு நம்பலாம் என்பதை அந்த மாந்தர்கள் நிரூபித்து உள்ளார்கள்.

சாந்தியின் தற்கொலை அவளின் மனமாற்றத்திற்கான முயற்சிக்கு ஆதரவாய் சுமித்ராவும், உமாவின் தந்தையும். சாந்தியின் போராட்ட குணம், ரமேஷ்க்கு ஏற்படும் விபத்து ஏற்பட்டு சாந்தி உதவிடச் செல்லும் போது இந்தப்பெண்ணின் வாழ்வும் சராசரியாகிவிடுமோ என்று நினைத்தால் அதிலும் ஒரு ட்விஸ்ட். தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று அவள் எடுக்கும் முடிவு வரவேற்கத் தக்கது.

ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஒரு மாரல் எல்லா செண்டரும் ரசிக்கும்படியான அனுபவரீதியான அறிவுரைகளோடு ஒரு கதையைத் தந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.ஒரு அத்தியாயத்தின் துவக்கமே கதையினை தொடர விருப்பம் அளிக்கும் தற்கொலை என்ற ஆயுதம் முதன்முறையாக வாழ வைத்து இருக்கிறது.

நிலவின் குளிரும் தென்றலின் வருடலும் ஒரு நடை போடலாம் நாவலோடு !

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...