அறிமுகம் மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 – அக்டோபர் 10, 1974) 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார். வாழ்க்கைச் சுருக்கம் மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் முனுசாமி முதலியார் – அம்மாக்கண்ணு தம்பதிக்குப் பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. மு.வ. வின் கல்வி,வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகிலுள்ள வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928-ஆம் ஆண்டில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார். எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காகக் கிராமத்துக்குச் சென்று, அங்குத் திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார். 1931-இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர்த் தாமே பயின்று 1935-இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். 1935-ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார். இவர்களுக்குத் திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939-இல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். பேராசிரியராகப் பணி 1939-ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக் கல்லூரியின் “கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்” என்ற பொறுப்பை ஏற்றார். 1944-இல் “தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். 1948-இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் “சங்க இலக்கியத்தில் இயற்கை” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாகத் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது. 1939-இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்குப் பணியாற்றினார். 1945-இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே 1948-ஆம் ஆண்டில் மட்டும், தனது முனைவர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 1971-இல் மதுரைப் பல்கலைக்கழகத்…
Category: எழுத்தாளர் பேனாமுனை
“எழுத்து சேவை என்.சி.எம்மும்”
இன்விடேஷன் ஃப்ரூஃப பார்த்ததுமே நாங்க சந்தோஷப்பட்டது நெஜம்.ஏன்னா பல முக்கிய பிரமுகர்கள் மேடைல பேசறவங்க லிஸ்ட்ல இருந்ததால. ” என்ன இன்விடேஷன்..யார்லாம் சந்தோஷப்பட்டீங்க..?” னுதான கேட்கறீங்க. எழுத்தாளரும் நண்பருமான NcMohandoss Ncm – ன் ரெண்டு புக் ரிலீஸ் பத்ன இன்விடேஷன்.சந்தோஷப்பட்டது…
பாவேந்தர் பாரதிதாசன் (1891 – 1964)
“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம்,…
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1930-1959)
”சிவப்புக்கொடி பறந்தால் தான் பணிகள் நடக்கும்!” – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் சிறப்புப் பதிவு! ‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ள நல்லவரின் கூட்டாளி’’ என்ற பட்டுக்கோட்டை ஜெயகாந்தனின் பட்டைத்தீட்டிய வரிகளுக்குச் சொந்தக்காரர் ‘பாட்டுக்கோட்டை’ என்று அழைக்கப்படும் பட்டுக்கோட்டை…
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ‘பாரதிய பாஷா’ விருது..!
நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார். இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வரும் கொல்கத்தாவை சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷித்…
போரூரில் கனவுத் தொழிற்சாலை!
சென்னையில், எழுத்தாளர் மடிப்பாக்கம் வெங்கட் வசிக்கும் ஏரியா எதுன்னு சரியா சொல்லுங்க, பார்க்கலாம்! மடிப்பாக்கமா…? அதான் இல்லே. அவர் வசிப்பது கோவிலம்பாக்கத்தில். பாம்பே ஜெயஸ்ரீ சென்னைக்கே வந்து செட்டிலானாலும், கல்கத்தா போய் செட்டிலானாலும் அல்லது வெளிநாட்டுக்கே போய் செட்டிலானாலும் அவங்க எப்பவும்…
ஜெயகாந்தன் (1934 – 2015)
ஜெயகாந்தன் (த. ஜெயகாந்தன்) (ஏப்ரல் 24, 1934 – ஏப்ரல் 8, 2015) தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலும் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸிலும் ஒத்திசைந்து பணியாற்றியவர். ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். தமிழகத்தின்…
காலம் ஒருநாள் மாறும் (சிறுகதை )| வி.பிரபாவதி
மணி இரண்டிருக்கும். செல்லாயி தனது குடிசை வீட்டுக்கு வந்து தாழ்ப்பாளின் மாட்டிய கொக்கியை அகற்றி விட்டு உள்ளே நுழைந்தாள். திருட்டுப் போக வீட்டில் ஒன்றும் இல்லை. கொக்கி போட்டு வைத்தால் நாய் பூனை வராது. காலை எழுந்ததும் கொஞ்சம் பழைய சாதத்தை…
