எல்லோருக்கும் நண்பரான முனைவர் பாலசாண்டில்யன் எழுதிய ‘வயதை வெல்லும் வாலிபர்கள்’ என்ற 50 சாதனையாளர்கள் பற்றிய ஆவண நூல் (5.10.2025) மாலை சென்னை மேற்கு மாம்பலம் மிதிலாபுரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது .
சாய் சங்கரா திருமண தகவல் தொடர்பு மையத்தின் நிறுவனர் முனைவர் நா. பஞ்சாபகேசன் தலைமையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி வா. திருமலை நூலை வெளியிட தபம்ஸ் குழுமத்தின் நிறுவனர் முனைவர் பா மேகநாதன் முதற் பிரதியினை பெற்றுக் கொண்டார்.

மேடையில் தொடர்ந்து உரத்த சிந்தனையை சங்கத்தின் இணைச்செயலாளர் கவிஞர் ஜி சுப்பிரமணியன், ஸ்ருதிலய வித்யாலயா இசை நாட்டிய பள்ளியின் முதல்வர் கலைமாமணி பார்வதி பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மாரிசாமி, கவிஞர் கார்முகிலோன் சார்பாக பொதிகை மின்னல் ஆசிரியர் வசீகரன் மற்றும் எழுத்துலக பெருமக்கள் அனைவரும் நூலின் பிரதிகளை பெற்று சிறப்பித்தனர்.
திரும்பிய பக்கம் எல்லாம் பால சாண்டில்யனின் நட்புக்கும் அன்புக்கும் இலக்கணமாக திகழ்ந்த கவிஞர்கள் எழுத்தாளர்கள் பண்பாளர்களின் அன்பு நிறைந்த அரங்கமாக இருந்ததைப் பார்க்கவே பரவசமாக இருந்தது.
இந்நிகழ்ச்சியில் பேனாக்கள் பேரவை அமைப்பின் நிறுவனர் எழுத்தாளர் எம் சி மோகன் தாஸ், பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா, கலைமகள் ஆசிரியர் கலைமாமணி கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் , ஆடிட்டர் ஜெ. பாலசுப்பிரமணியன், உடுப்பி துளசி பட் இலக்கியப்பீடம் இதழின் ஆசிரியர் கண்ணன் விக்கிரமன் மக்கள் குரல் நாளிதழின் ஆசிரியர் கலைமாமணி ராம்ஜி, சிதம்பரம் நாடாளுமன்றத்தின் மேநாள் உறுப்பினர் திரு குழந்தைவேலு, யு எஸ் எஸ் ஆர் நடராஜன், மலர்வனம் ராம்கி , உட்பட ஏராளமான பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக புலவர் தி.வே விஜயலட்சுமி இறைவணக்கம் பாட சாய் சங்கரா நிறுவனத்தைச் சார்ந்த ஊழியர்கள் ஆனந்தம் ஆனந்தம் என்கின்ற பாடலைப் பாட, கவிஞர் ஜி சுப்பிரமணியம் ருத்ரம் ஜெபிக்க நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கியது.
உரத்த சிந்தனை சங்கத்தின் தலைவர் பத்மினி பட்டாபிராமன் வரவேற்புரை வழங்க திரு மாரிச்சாமி அவர்கள் வயதை வெல்லும் வாலிபர்கள் நூலை அறிமுகம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பால சாண்டில்யனின் எழுத்து மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி சாய் சங்கரா நிறுவனத்தின் சார்பில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை திரு பஞ்சாபகேசன் வழங்கினார்.
பாலசாண்டில்யனுக்கு கிரீடம் .ஆடை, மாலை மரியாதையை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகி திரு கோபிநாத் அவர்களும் சாய் சங்கரா பஞ்சாங்க பஞ்சாபகேசன் அவர்களும் இணைந்து செய்து சிறப்பித்தனர்.
ஆடிட்டர் என் ஆர் கே சாயி சங்கரா மேட்ரிமோனியல்ஸ், பேனாக்கள் பேரவை, வானவில் பண்பாட்டு மையம் ,குவிகம் இலக்கிய அமைப்பு போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பாலசாண்டில்யனைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி!

எழுத்துக்கு மரியாதை என்பதற்கு வரலாற்றில் இலக்கணமாக இருந்த இந்த நிகழ்ச்சியின் மூலம் எல்லோருக்கும் பளிச்சென்று நினைவில் நிற்கக்கூடிய விஷயங்கள் இரண்டு.
ஒன்று பஞ்சாபகேசனின் பரந்த விரிந்த மனது. மற்றொன்று பாலாவின் எதையும் எதிர்பார்க்காத அன்பு பிளஸ் நட்பு
வாழ்க பபா ( பஞ்சு – பாலா ) வெற்றிக் கூட்டணி ! வளர்க நட்பு!
