ஆஸ்கார் வைல்ட் நினைவு நாளின்று ஐரிஷ் எழுத்தாளரான ஆஸ்கார் வைல்டு. எழுத்துப்பணியில் மட்டுமின்றி நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் புகழ் பெற்றவர்.பல சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ள ஆஸ்கார் வைல்டு, தனது நகைச்சுவை வாய்ந்த படைப்புகளின் மூலம் பிரபலமானவர். இங்கிலாந்தின் மிகச்சிறந்த நாடக…
Category: எழுத்தாளர் பேனாமுனை
ஆஸ்கார் வைல்ட் நினைவு நாளின்று
உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் பாரதி உலா இன்று (23.12.2024) காலை 10 மணிக்கு மதுராந்தகம் வில்வராய நல்லூர் V.K.M உயர் நிலைப் பள்ளியில் தொடங்கி சிறப்பாக நடை பெற்றது. பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியை , மதுராந்தகம் கல்வி…
சுரதா பிறந்த தினம் இன்று:
சுரதா பிறந்த தினம் இன்று: இந்த யுகத்தின் சிறந்த கவிஞரான “சுரதா”வை அறியாதவர்கள் இருக்க முடியாது.மரபில் தோய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கவிதைப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, உவமைக் கவிஞரின் கவிதைகளில் ஒரு கவிதையையாவது இரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.மனதில் தனக்குச் சரியெனப்பட்டதை பளிச்சென்று…
‘உவமைக் கவிஞர் சுரதா’
சுரதா (Suratha; நவம்பர் 23 1921 – சூன் 20 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். வாழ்க்கைக் குறிப்பு சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-செண்பகம் அம்மையார் ஆவர். பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார். பாரதிதாசனுடன் தொடர்பு 1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது. கவிதை இயற்றல் சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது. பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார். நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த தலைவன் இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் சிவாஜி இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. திரைப்படத் துறையில் சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், ‘அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு’, மற்றும் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா’ ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். எழுத்துப்பணி சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார். 1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார். 1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974). பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார். தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு. பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். பெற்ற சிறப்புகள் 1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. 1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.…
‘பூரணி’ அம்மா மறைந்த நாளின்று
கவிஞர், கலைஞர், இலக்கிய ஆர்வலர், கதைசொல்லி, எழுச்சி கொண்ட பெண், சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதாபிமானி, மொழிபெயர்ப்பாளர் என்று ஏழு வகைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பூரணி நூறு ஆண்டுக் காலம் வாழ்ந்து சம்பூர்ணமடைந்தார் . குடும்பத்தினருக்குத் தன் சாவு பற்றி…
இந்திரா சௌந்தர்ராஜன்….
இந்திரா சௌந்தர்ராஜன்….*இன்னும் மூன்று நாட்களில் (13 நவம்பர்) உங்களுக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து எழுதியிருக்க வேண்டும். இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை சார். இதை நம்பவும் முடியவில்லை. எதிர்பாராத திருப்புமுனைகளைத் தந்துகொண்டே இருந்தீர்கள்… இப்போதும் தந்து விட்டீர்கள். இணைந்து ஒரு முறை…
‘கு.ப.சேது அம்மாள்’ நினைவு நாள்..!
தமிழில் சிறு கதைத் தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் கு.ப.சேது அம்மாள். அதாவது தமிழ்ச் சிறு கதை இலக்கியத்துக்கு அடித்தள மிட்டவர்களில் முதன்மையானவர் கு.ப.ரா. எனப்பட்ட கு.ப. ராஜ கோபாலன். அவரோட தங்கைதான் இந்த சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை…
திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு
திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அ:.தவள் யாப்பினுள் அட்டிய நீர்.(1093) என்னை நோக்கியவள், ஏதோ என்னிடம் கேட்பது போல கேட்டு நாணித் தலைகுனிந்தாள்.அந்த குறிப்பு எங்கள் அன்பு கலந்த காதல் பயிருக்கு வார்த்த நீராயிற்று. இதே பொருளில்…
கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள் (செப்டம்பர் 16) நிகழ்வு ஒரு நாள் முன்னாதாக நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் சென்னை படைப்பு அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் ‘ஓலங்கள் சூழலும் உடைந்த இசைத்தட்டு’ என்ற கிருபாவின் கையெழுத்து பிரதியோடு…