பாரதி உலாவின் 17 ஆவது நிகழ்ச்சி சென்னை முகப்பேரில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளியில் தாளாளர் திருமதி கிறிஸ்டி ஜேம்ஸ் வரவேற்புரை வழங்கினார்.

பாரதியார் வேடம் அணிந்த சிறுவர்கள் பாரதியின் வரிகள் அடங்கிய பதாகையை வரிசையாக தாங்கிப் பிடித்து நின்ற காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. மாணவ மாணவிகளின் பாடலரங்கம் , நடன அரங்கம் , பேச்சரங்கம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன
உரத்த சிந்தனை சங்கத்தின் மக்கள் தொடர்பாளர் திருமதி மனோன்மணி, டெக்னோ ப்ராடக்ட் முரளி சீனிவாசன், பேனாக்கள் பேரவையின் நிர்வாகி கவிஞர் வெ.தயாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
திருமதி ராஜேஸ்வரி பாலகிருஷ்ணன். கர்நாடக இசை பாடகி முனைவர் லலிதா மோகன், எழுத்தாளர் மீரா மாயா தாமரை பூவண்ணன் , பிச்சம்மாள் ரமேஷ், கவிஞர் சுமித்ரா கோவிந்தசாமி, கவிஞர் பி.வி ராஜ்குமார், லட்சுமி ரகுநாத், உரத்த சிந்தனையின் நிறுவனர் எஸ்வி ராஜசேகர், பூபால் சிங் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியினை சங்கத்தின் பொதுச்செயலாளர் உதயம் ராம் தொகுத்து வழங்கினார் .
