உரத்த சிந்தனை ஹைதராபாத் கிளையின் சார்பில் பாரதி உலா 2025 நிகழ்ச்சி ரவீந்திர பாரதி சிற்றரங்கில் நடைபெற்றது.
குத்துவிளக்கேற்றும் வைபவத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

அண்மையில் காலமான எழுத்தாளர் SICA திரு.ராமச்சந்திரன் மறைவிற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்தன.
நிகழ்ச்சியில் உரத்த சிந்தனை ஹைதராபாத்தின் தலைவர் கவிஞர் அருண்மதி ராம திலகம் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது .
அறிஞர் கோபாலன் தலைமையில் “பாரதியும் இவர்களும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
உரத்த சிந்தனை சங்கத்தின் செயலாளர் திரு.ராஜு வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற விசில் இசை கலைஞர் சிவ பிரசாத் கலந்து கொண்டு விசில் இசையில் பாரதியார் பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்.
உரத்த சிந்தனை பாரதியார் சிறப்பிதழை திரு.தேவி பாலா வெளியிட நகைச்சுவை திரு.சந்திரசேகர் அவர்களும் ,பத்மாவதி ரியல் எஸ்டேட் நிறுவனர் திரு.சதீஷ் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் தேவிபாலா மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி பாராட்டியதோடு பாரதியாரின் கருத்துக்கள் இன்றைய இளைய சமுதாயத்திடம் சேர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். திரு ராஜா ராம் நன்றியுரை கூற நிகழ்ச்சியை செயலாளர் உதயம் ராம் தொகுத்து வழங்கினார்
