மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகன் அவர்கள் எழுதிய “தலேஜூ” என்ற நாவலுக்கும் பாவலர் க. ஜெய் விநாயக ராஜா அவர்கள் எழுதிய “நட்சத்திரங்களோடு ஒரு பகல் பொழுது” என்ற ஐந்துமொழி ஹைக்கூ நூலுக்குமாக, இரு நூல்கள் அறிமுக விழா புதுச்சேரியில் நடந்தது. கடந்த 27-12-2025, சனிக்கிழமை அன்று புதுச்சேரி, தோழமைக் கூடல் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடந்தது.
இந்நூல்கள் அறிமுக விழாவிற்கு, இ.வ.ப. கலால்துறை, மேனாள் இணை ஆணையர், இலக்கியமாமணி சு. சண்முகசுந்தரம் அவர்கள் தலைமை ஏற்றார். பாவலர் க. ஜெய் விநாயக ராஜா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
பாரதிதாசன் அறக்கட்டளையின் நிறுவுநர், கலைமாமணி, முனைவர் கோ. பாரதி அவர்கள் நாவல் நூலை வெளியிட்டார். நூலை பெற்றுக் கொண்டு, புதுச்சேரி அரசு, தலைமைச் செயலகம் – சட்டத்துறை, மொழிபெயர்ப்பாளர், கலைமாமணி, முனைவர் சுந்தர முருகன் அவர்கள் அறிமுக உரை ஆற்றினார்.
புதுச்சேரி அரசு, பொதுப்பணித்துறை, மேனாள் கண்காணிப்புப் பொறியாளர், நடைவண்டி சிறுவர் கலை இலக்கியக் கழகத் தலைவர், கலைமாமணி, முனைவர் மு. பாலசுப்ரமணியன் அவர்கள் ஐந்து மொழி ஹைக்கூ நூலை வெளியிட்டார். நூலைப் பெற்றுக் கொண்டு, கவிஞர் மாலதி இராமலிங்கம் அவர்கள் அறிமுக உரை வழங்கினார்.
தொடர்ந்து, கவிஞர் ஆதிரன் அவர்கள் வாழ்த்துரை அளித்தார். மலேசிய பாஷோ ஹைக்கூ தேடல் குழு – நிறுவனத் தலைவர், மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகன் நெகிழ்வான ஏற்புரையை ஆற்றினார்.
கவிஞர் பிரீத்தி விஜயகுமார் அவர்கள் இந்நிகழ்ச்சியைத் தொகுத்தார்கள். கலைஇலக்கியத் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் தலைவர், கலைமாமணி வி.பி. மாணிக்கம் அவர்கள், நன்றியுரை ஆற்றினார்.
