உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என என்னிடம் கேட்டாள். அவள். அதான் கேட்டுவிட்டாயே! கேள் என்றேன். அவளிடம் நான். நள்ளிரவில் நங்கையொருத்தி நடக்கும் நாளே சுதந்திரம் என்றாரே! காந்தி. வந்துவிட்டதா சுதந்திரம்? என்றாள். இப்பொழுது காந்திகள் இங்கில்லை. ஆதலால் நண்பகலிலும் சுதந்திரம்…
Category: கவிதை
தூரிகையின் பெருமை | ஆதியோகி
தூரிகையோ, உளியோ, பேனாவோ பெரிதாய்ப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது…? பெருமைமிக்க ஒரு ஓவியனின், சிற்பியின், கவிஞனின் கைகளில் கருவியாய் இருந்ததைத் தவிர… ++++++++++++++++++++++ மகிழ்ச்சி ———– நாளை வாடப் போவது தெரிந்தும்தானா, சிரிக்கின்றன பூக்கள்…? ++++++++++++++++++++++ வார்த்தைகள் ———– ‘பூக்கள்…
நீ இல்லாத நான் | பவானி
ஜென்மங்கள் ஏழு என்றால் உறுதியாக இருக்கும் இந்த ஜென்மமே இறுதியாக இருக்கட்டும் இறைவா… மரணம் வரை விடை தெரியாத ஒரே கேள்வி யாரை நம்புவது ? இழப்பின் வலி இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்… நீ இல்லாத நான் என்றுமே அனாதை தான்……
அறிந்திடாத ராகங்கள் | ராஜகம்பீரன்
என் கருத்துக்குநிகரானமாற்றுக் கருத்தைஒருவன் உரைத்தால்மனம்உடைந்து போகிறேன் என் கடவுளைநம்பாத ஒருவன்எதிர்க்கருத்தால்மறுத்து விட்டால்தாங்கிக்கொள்ள இயலாமல்நிலைகுலைந்து போகிறேன் இந்திரனைவழிபட்டபக்தர்களைப் போலவேஇந்திரனும்காலத்தால்இல்லாமல்போய் விட்டான் என்னைப் போலவேஎன் கடவுளும்ஒரு நாள்இல்லாமல்போய் விடுவான் மந்திர ஓசைகளும்மனிதர்களைப் போலவேஒரு நாள்மரணிக்கக் கூடும் என்பதைஏற்க இயலவில்லை கனவுகளால்கைவிடப் படுவதைப் போலநம்மால்கனவுகளைகைவிட இயலவில்லை…
தமிழ்மொழி | மாலா மாதவன்
தமிழா தமிழா தமிழ்மொழி அமுதாம் … தடையைத் தகர்ப்பாய் தமிழினில் பேச! தமிழின் சிறப்புத் தானறிந் தாயோ … தமிழில் பேசத் தயக்கமேன் தோழா? சங்கம் வளர்த்தத் தமிழ்மொழி என்பர் …..சாலச் சிறந்து விளங்கிடும் மொழியே எங்கும் எளிதாய்ப் பரவிடும் இனிதாய்…
கடந்து போகும் ரயில் | திருமாளம் எஸ். பழனிவேல்
ரயில் கடந்து செல்லும் போதெல்லாம் கேட் அருகே நின்று கொண்டு கையசைத்து கையசைத்து சந்தோஷமாய் கத்தியது நினைவிலே வந்து போகிறது.. சிக்னலில் நின்று கிளம்பிய ரயிலின் துணை ஓட்டுனராய் கொடியசைத்துக் கொண்டே கேட்டை கடக்கும்போது பார்க்கிறேன் கையசைக்க ஆளில்லை.. நின்று கொண்டு…
அன்பு | கவிதை | மாதங்கி
உயிருக்குள் உயிர் உருவாகி, வலியின் உச்சத்தில் ஜனித்து, “குவா குவா” இசையில் வலியை மீறிய மகிழ்வின் புன்னகை தாய்மை; தன் உதிரம் உயிராய் கண்முன் உருவாகி உயிர்தொடும் இதத்தின் எல்லையில் தந்தையின் தாய்மை; கண்ணாடி வளையல்கள் களிமண் பொம்மைகள் பறக்கும் ஏரோப்ளேன்…
சிங்காரப் பெண்ணொருத்தி…! | மாதங்கி
சிவப்பு சிக்னலின் நடுவே சிங்காரப் பெண்ணொருத்தி… வண்ணச் சரிகைச் சீலை .. சன்னல் வைத்த ரவிக்கை… உதட்டுச் சாயம்… மையெழுதிய அகலக் கண்கள் … கைதட்டிக் காசு கேட்கிறாள்… பிச்சையாய்த் தோன்றவில்லை… தந்ததும் தலையில் கைவைத்து புன்னகையுடன் வாழ்த்துகிறாள்… பொய்யெனத் தோன்றவில்லை….…
அன்னையின் அன்பில் – அருணா ஸ்ரீ பிரபாகரன்
வலி தாங்கிஉயிர் தந்தாள்.. இமை தாங்கும் விழிகளாய்ஒளி தந்தாள்.. நதியோடும் அலை நடுவேவிளையாடும் நீர்க்குழிமியாய்நமை ஈன்று அன்பின் கடலானாள்.. நினைவில் அகலாத அவள் முகம்நிலத்தில் இருந்து அகன்றாலும்அகலாது அந்த நிலவு முகம்.. தன்னலம் காணா ஒரு மனம்..எந்தாளும் தளிரையே காணும் அந்த…
சலவைக்கான இரவு | ராசி அழகப்பன்
இரவைத் துவைத்துஈரம் சொட்டாமல்உலர்த்த வேண்டும்எப்போதாவது… சகட்டுமேனிக்குகனவுகள் முளைத்துகண்களை சங்கடத்திலாழ்த்துகிறது சொற்களில் மகரந்தப்பொடிஎப்படித்தான் ஒட்டிக் கொள்கிறதோபராபரமே… உறங்கா விரல்களின் வழியேபயணிக்கிறது காட்டுச் சிறுக்கியின்களவுக் காமம்.. மீன்களெல்லாம் தூண்டில்கள்தூண்டிலெல்லாம் மீன்கள்கரைகளற்ற கும்மிருட்டில்துள்ளிப் பாய்கின்றன.. இரவுக்கு ஒரு லாக்கர்இருந்தால் கூடஎப்போதும் நல்லது பகலில் திறக்கசாவியோடுவெளிச்சம் ஓட…