தந்தவனைத் தேடி

தந்தவனைத் தேடி
——-‐———————–‐–
கொடுக்கல் வாங்கல்
கணக்கு இது
கோடிக்கணக்கில்
கிடக்குதடா
எடுத்துக்கொள்வான்
கெடு முடிந்தால்
கொடுத்த கணக்கையே
தடுக்க கூட முடியாதேடா
அடுத்த கணக்கில்
கவனம் வைப்பான்
அடுக்கடுக்காய் தொடருமடா
ஆண்டவன் பார்வை
படருமடா

அசலுக்கு லாபம் இன்பமடா
அவனுக்கு வட்டி
துன்பமடா
துன்பத்தை இன்பத்தில் கழிச்சுக்கடா
துணிதான் மிச்சம்
படுத்துக்கடா
அன்பெனும்
அருளால்
அடையும் லாபம் இன்பமடா
தவறினை தூண்டிட
தந்திடும் வட்டி துன்பமடா
தலைவனை துதித்து
தவறினை திருத்து
தவணையை செலுத்து-இதில்
தவணை என்பதே
தண்டனை தானடா
ஆண்டவனை நினைத்து
அகத்துள் நிறைத்து
அசலைச் செலுத்து
அடைந்தால்
அதுதான்
செல்வமடா

கவிஞர்
காமாட்சி சுந்தரம்.

One thought on “தந்தவனைத் தேடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!