கிரிக்கெட்டு விளையாட்டுஒரு மாயம்/.”ODI கிரிக்கெட் உலகக்கோப்பை 2023/பி வி வைத்தியலிங்கம்

 கிரிக்கெட்டு விளையாட்டுஒரு மாயம்/.”ODI கிரிக்கெட் உலகக்கோப்பை 2023/பி வி வைத்தியலிங்கம்

“ODI கிரிக்கெட் உலகக்கோப்பை 2023”

கிரிக்கெட்டு        

  விளையாட்டு 

ஒரு மாயம்.

பலருக்கு

அதுதான்      

  வாழ்வாதாரம்.

பார்ப்பவரைச்                  

சுண்டி இழுக்கும்

இக்காந்தம்

ரசிகர்களின்    

 தணியாத              

தாகம்.

நாட்டுப் பற்றை   

  வளர்க்கும் அதன்

    வேகம்

நமக்குப்                       

புரியாத                         

ஒரு மர்மம்.

இந்தியாவில்

அதற்கிருக்கும்             

மௌசு

அதை விளையாடும்

வீரர்களுக்கோ

 பெரும் பவுசு.

இது நடக்கும் 

நாட்களில்தான்

நம்   வீடும்

ஸ்தம்பித்துப் போய்விடுமே

 நம்

நாடும்.

ஸ்ரீகாந்து

கவாஸ்கரு

கப்பிலு 

இவரைத்                            

தெரியாதவர்                   

நம்மூரில் யாரு ?

அன்று உலகக் கோப்பையை

   வென்றவர்கள்

 இவரே 

அதன்பின்பு அதை

   வென்றவனே நம்

    தோனி.

இன்று

 அதை வெல்லப்போவது               

யாரு

என்று என்னிடம்

   யாராவது                            

கேட்டால்

இந்தியாதான்

அதிலென்ன

சந்தேகம்

என்றுரைப்பேன்

ஐயமின்றித்                   

தெளிவாக.

ஷுப்னம் கில்லு                               

ரோஹித்து                       

கோலி

பும்ரா                                 

சிராஜு                            

அஸ்வின்

சூர்யா    

                              

ஜடேஜா                           

பாண்டியா

இவரிருக்க

 நமக்குத்தான் ஏன்

    கவலை ?

46 நாட்கள்                

தொடரும்                       

இப்போட்டி

நவம்பர்  

 பத்தொன்பதில்              

முடியும்.

பாரதம் வெற்றி                

பெரும்                        

தருணம்

அவளை ஆதரிப்போம்

ஆர்ப்பரிப்போம்

அணைப்போம்.

13 வது இவ்வுலகக் கோப்பையை

வென்று

பெரும் சாதனை படைப்போம்

வாரீர்.

அன்புள்ள
பி வி வைத்தியலிங்கம்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...