அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார்

 அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார்

தமிழகத்தில் பல நகரங்கள் இருந்தாலும் ஒவ்வொரு நகரத்திற்கும் தனி சிறப்பு உண்டு.

கடலூர் மாவட்டத்தில் உள்ள “வடலூர்” என்னும் ஊருக்கும் தனி சிறப்பு.

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் 30.01.1874 ல் சோதி வடிவமாய் தைப்பூச திருநாளில், இறைவனோடு இரண்டறக் கலந்தார் என்பதே வரலாற்று உண்மை.

அந்த மகானின் பிறந்தநாள் இன்று (05.10.1823).

“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்னும் இனிய சொற்கள் அடங்கிய மாமந்திரத்தை எல்லோரும் நெஞ்சில் நிறுத்திட வைத்தவர் திரு இராமலிங்க அடிகளார் அவர்கள்.

இளம் வயதிலேயே தனது அண்ணன் சபாபதி என்பவரின் அறிவுரையின் பேரில், சென்னையில் சபாபதி என்பவரிடம் அனுப்பி வைத்தார்.

அங்கு அவருக்கு குருவாய் இருந்த சபாபதி என்பவரின் மாணவனாக இருந்தாலும், இராமலிங்கம் அவர்களின் கலந்த தெய்வீகம் கலந்த பக்தி சென்னை கந்தகோட்டத்தின் முருகனை எண்ணிப் பாடினார்.

எல்லாம் தெரிந்த இராமலிங்கத்திற்கு, தான் ஆசிரியராக இருந்து படிப்புச் சொல்லித் தருவதை மறுத்து, மீண்டும் தனது அண்ணனிடமே விட்டுவிட்டார்.

இளம் வயதிலேயே இறையருள் பெற்று சொற்பொழிவு சென்னையில் நடத்தி அன்றைய மக்களால் கவரப்பட்டவர்.

இவரிடம் கலந்த அபூர்வ சக்தியினை கண்ட அவரது சகோதரர் நெகிழ்ந்து போனார்.

பின்னர், சமரச சன்மார்க்க நெறியை பரப்பினார், சத்திய ஞான சபையை நிறுவினார்.

” வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்”. பயிர்கள் செழித்தால் தான் மக்களுக்கு உணவு கிடைக்கும். வாடிய பயிரால் உற்பத்தி, விளைச்சல் பெருகாதே என்று மனம் வருந்தி உள்ளார்.

மக்களின் பசி தீர்க்க உணவு வேண்டும் என்பதை அறிந்தார்.

வடலூர் சத்திய தருமசாலையில் இன்று அவர் மூட்டிய அடுப்பு இன்னும் தொடர்ந்து எரிகிறது என்பதும் வரலாற்று உண்மை.

” ஜீவகாருண்ய ஒழுக்கம்” மற்றும் மனுமுறை கண்ட வாசகம் என்னும் நூல்களை எழுதினார் இராமலிங்க சுவாமிகள்.

தூய்மையான வெள்ளை ஆடை அணிந்த இராமலிங்க சுவாமிகள் இறைவனிடம் மனம் உருகி பாடிய பாடல்.

” கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் எண்ணில் கலந்தே இருக்கின்றான் பண்ணில் கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில் கலந்தான் கருணை கலந்து….

என்னும் இந்த பாடல் நம்மையும் நெகிழ வைக்கும்..

இராமலிங்க சுவாமிகள் நினைவை, அவருடைய பிறந்த நாளான இன்று எண்ணி அவர் கூறிய கருத்தின் வழி நடப்போம்…

முருக. சண்முகம்

   முருக. சண்முகம்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...