வாழ்க்கை
வாழ்க்கை/
கவிஞர் / அறிமுகம்
——————–
நெருப்புக் கோளத்தில் பூமி பிறந்தது
நீர்க் குவளையில்
நாம் பிறந்தோம்
வாயுவால் வாழ்ந்தோம்
ஆகாயம் தந்த ஆதாயமாக
நிலம் கண்டது நீரினை
வளம்கண்ட தாவரங்கள்
வாழ்வாதாரமானது
உண்டோம் உடுத்தினோம்
உலகைச் சுற்றினோம்
உடமைக்காக கடமையாற்றினோம்
இணையென்று இன்னோர் உயிரைப் பிணைத்துக் கொண்டோம்
பிள்ளைகள் பிறந்தது
மழலைகளாக மலர்ந்தவர்கள்
மறுசுழற்சியின் மகிழ்வாக
மாலைகள் சூடிட மணமாகினர்
பேரப்பிள்ளைகள் பிறந்தன
பேர் உவகைப் பேணிணோம்
பேரம் பேசியபடி படைத்தவன் பறித்துக் கொண்டான்
பகிர்ந்தவர்கள் பதறிக் கதறினர்
மடிந்தான் மனிதன்
முடிந்தன முறையாய்.
கவிஞர்
செ.காமாட்சி சுந்தரம்./
அறிமுகம்