கவிதை தொகுப்பு/நிழலற்ற தூரம்/தஞ்சைதவசி./பேசும் புத்தகங்கள்‘

 கவிதை தொகுப்பு/நிழலற்ற தூரம்/தஞ்சைதவசி./பேசும் புத்தகங்கள்‘

கவிதை தொகுப்பு: 

நிழலற்ற தூரம்

நூல் ஆசிரியர்: தஞ்சை தவசி.

அமிர்தாலயம் வெளியீடு.

104 பக், ரூ 100/

அமிர்தா ஆலயம் 4 /79

 அம்மா வீடு ,மாங்காளியம்மன் கோயில் தெரு செயின்ட் தாமஸ் மவுண்ட் சென்னை,600005

பதிப்பகம் : தமிழ் வெளி

 (நூல் விற்பனை உரிமை)

தமிழ்வெளி

தொடர்புக்கு: 90940  05600.

பேசும் புத்தகங்கள்‘

நான் இந்ததலைப்பின் கீழ் தான் நான் படித்த புத்தகங்களைப்பற்றி சொல்வேன்.இதை விமர்சனமாக கொள்ள வேண்டாம்

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நான் சந்தித்த புத்தன் தான் திரு தஞ்சை தவசி

எனக்கு அறிமுகம் செய்தவர் நண்பர் அமிர்தம் சூர்யா

பேசிக்கொண்டோம்,நெருங்கியதில் இவரின் கவிதைப்புத்தகத்தை எனக்கு திறந்தார்

  இது நடந்து 6 மாங்கள் ஆகின்றன

முதல் தடவையாக இந்த புத்தனை திறந்தேன்.

அதற்கு முன் அந்த அட்டை ஓவியம் ஏதோ

சொன்னது.

அவ்வளவு சீக்கிரத்தில் அவனை வாசிக்க முடியாது என சொல்லியிருக்கலாம் போல.

இன்று வரை அந்த கவிதைகள் தினம் ஒரு அர்த்தத்தை சொல்கிறது.

நான் முன்னுரை மற்றும் ஆசிரியர் உரைகளை வாசிப்பதில்லை.

அவர்களின் பாதிப்பு எனக்கு வரக்கூடாது என்பதற்காக.

கவிதை வாசிப்பு எப்பவும் உற்சாகம்.

அது ஒரு வரிக்கவிதையாக இருந்தாலும் இல்லை ஒரு பக்கம் நீண்டாலும்

மனதை உடன் பாதித்தால் அந்த கவி.ஞன்

என்னை கவர்ந்தான் என சொல்வேன்

நண்பர் தவசியின் கவிதைகள் மிக

பாதிப்பை செய்தது என்பதைவிட

ஒரு மனப்பிரளயத்தை உண்டாக்கி இருக்க செய்தது.

ஆனால் அவரின் கவிதை வரிகளில் அந்த

ஆக்ரோசம் இல்லை.

இந்த இடத்ததில்தான் அவர் வெற்றியாளர்.

என் மனதின் பசிக்கு அந்த கவிதைகள் நல்ல விருந்தோம்பல் தான்.

அவரின் வாழ்வின் தனிமைப்பயணத்தை காணமுடிகிறது.

கடந்தகால பயணங்கள் தான் அந்த நிழலற்ற தூரம்.

எல்லா கவிதைகளிலும் ஒரு ஒளிச்சிதறல்கள் நம்மை அதிர வைக்கின்றன.

படித்தப்பின் அவை உடனே மங்காமல்

தொடர்ந்து வர பல சமயங்களில் நான் மீண்டும் என்னை அதில் புதைத்துககொள்கிறேன்.

அவ்வப்போது வேறு அர்த்தங்களை காண்கிறேன்.

அவர் வெற்றி பெற்றுவிட்டார்.

யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு

அவை சொல்லும்.

அந்த சமூக நீதி.

எவ்வளவு நாள் இருந்தேன்

எவ்வளவு நாள் வாழ்ந்தேன் என்பதைவிட

அதில் உன்னைக்கண்டாயா

இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.

நம்மை நாமளே அடையாளம் காணமால் வாழ்கிறோம் என்பதை இவர் கவிதைகள் சொல்கின்றன

பிறரிடம் எதை எதையெல்லாம் பேசினேனோ

எதையெல்லாம் பேச விரும்பினேனோ

நேர்காணல் போட்டோ பிடித்தாற்போல

எல்லாவற்றையும் முன்தயாரிப்பு எதுவும் இல்லாமல் கடிவாளம் தெறித்த

தவசியின் கவிதைகள் எங்கும் தாயைப்பற்றி அவளின் அன் பு நேசம்

இரண்டாவதாக அவர்கண்ட புத்தனின் புன்னகை

எல்லா கவிதைகளிலும் அம்மா வருகிறாள்

புத்தன் சிரிக்கின்றான்.

 முன்னும் பின்னும் வடிவெடுத்த சுடர் நகர்வு

என்னுள் இன்னமும் அப்படியே இருக்கிறது

அம்மா தேர்ந்தெடுத்தது புத்தனின் புன்கை

அவளுள் என் உலகமே அடங்கிவிட்டது

ஒற்றை விளக்கு கவிதையில் சில வரிகள்

உண்மைதான் தாயின் மடி சொல்லும் உண்மைகள் ஆயிரம்

அந்த தஞ்சம் தான் நமது சொர்க்கமே

 ஆனந்த யாத்திரையில்,

ஒரு தலையாக வளர்ந்திருக்கிறது உலகம்

மூல காரணம் ஈரம் இல்லாத தீவுகள்

நாம்

சூழலின்  பயங்கரம் வானத்திற்கு

கீழே வாழ்கிறோம்.

முடிவு வரிகள்

நான் செத்தபிறகுதுன் ஆனந்த யாத்திரை

புரியும் என நம்புகிறேன்

நகரத்துத்தனிமையில்  

தூக்கம் வராத நகரத்து தனிமையில்

முழுசாக யாரும் இறந்துப் போவதில்லை

இறக்கி வைத்துவிட்டேன்

இனி உங்கப்பாடு

என்கிறார்

தனிமை ஏன் நம்முள் ஒரு கேள்வி எழுகிறது

ஒளியைத்தெளிதல்

கரைக்காணத்தான் அலை முடியுமா

உன்னால்‘

உயிரற்ற கல் வரலாறு எழுதப்படுவதில்லை

ஒரு தாவல் அனுபவத்தின் அருகில் பவதாரணி.

இவரின் கவிதை வரிகள் வாசகர்கள் ன் அறிந்த சொற்களே

அவை அவர்களின் புதிய வாசலைத் திறக்கலாம்

 அவரவர் கையிலிருக்கும் சாவியை சரியாக திறந்தால் இந்த வெளிச்சத்தை பெறலாம்

பல கவிதை தலைப்புகள் .

 பூர்விக பொம்மை ,எரியும் நந்தவனம் விரக்திக்கொப்புளம் ,சூலுற்ற அப்பா, மெளனம் பொய், விலகாதமீதங்கள்,தொங்கும் கத்தி,மரண உலை,திறந்த வலி இப்படி

இவர் இந்த தலைப்புகளுக்கு காபி ரைட்ஸ் வாங்கியாக வேண்டும்

இல்லையென்றால் பல திரைப்படங்களின் தலைப்புபளாக மாறலாம்

கவிதை வரிகள் ஒவ்வொன்றும் பேசும் பல சரித்திரங்கள்

எதிர்காலங்களின் கேள்விக்குறிகள்.

நம் ஆன்மாவை இங்கிருந்து பெயர்த்தெடுத்து ஒட்டமிடுகிறது.

நம்  விழிப்புகளை பிரகாசிக்க வைப்பவை

பக்கத்திற்கு பக்கம் ..

ஒவ்வொரு முறை நாம் வாசிக்கும்போதும்

அவரின் அந்த  சொல்மாயையில்

சிக்கவேண்டியிருக்கும்.

 தவசி கவிதைகளின் மறு உலகத்தை தன் கவிகைளால் வடித்திருக்கிறார்.

இவ்வளவு நாள் நீ எங்கே இருந்தாய் என கேட்போம்.

எந்த கவிதை வரம்பில் சிக்கவல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பல  கவிதைக்குள் நாம்  தனித்தனியாக வாசிக்கும்போது அவை தனித்தனியாக கவிதைகளாகி இன்னொரு புதிய  தளத்திற்கு செல்வதை மறுக்க இயலவில்லை.

சில வரிகள் ஒன்றாகி வேறு கவிதைகளில் வேறு அர்த்தங்களை சொல்ல

என்ன கவிஞன்டா இவன் என கேட்போம்.

.

சமகாலத்தை புரிந்து இவர் நம் முன் வைக்கும் இந்த எழுத்துகள்  இலக்கியத்திற்கும் மேலே என சொல்வேன்.

நாம் இததை  மிகச்சரியாகப் புரிந்து கொள்வதை பொருட்டுதான் எல்லாம்

புரியதாவர்களுக்கு இவர் புதிர்‘

புரிந்தவர்களுக்கு நாம் ஒரு புதிர் என்பதே உண்மை.

அதை நீ யே தெரிந்து கொள் என சொல்லி விட்டு விடுகிறார் தவசி

 இவரின் வரிகளில் சில

புரிந்தவர்க்குப்புரியட்டும் ஆகாசம் ரொம்ப பெரிசு

காதலிக்காதவர்கள் கடவுளை அறிவதில்லை

 கடவுளற்ற பெண்ணுலகம் தலைப்பில்

அநீதியின் சாம்பல் படிந்த

தூக்குமரத்தடியில்

முடிவற்ற வட்டமிடுதல்களில்

இருள்திரண்ட கோரமுகங்களுடன்

இவைகளுடன் பயணித்தால்

நெளியும் துர்தேவன்கள்.

காலப்புதரில்

நம்பிக்கைக்குரியவனுமில்லை.

நட்புக்குரியவனுமில்லை.

பூமி அசோகவனம்

மனசுக்குப் பக்கம்.

தகப்பனாய் யாருமில்லை. .

நினைவின் ரணங்களுடன்

அரைபட்ட தனிமை.

அம்மணத்தோடு

தொடர்பறுந்து கிடக்கிறது.

ஒண்டியாய் எரியும்

கடவுளற்ற பெண்ணுலகம்.

பௌத்த தரிசனத்தில்

ஒளிவிட்ட பாதையில் உச்சி எட்டுமென்றாலும்

மலையேற்றம் அடியில்தான் ஆரம்பிக்கவேண்டும்.

இருளின் மறுகரையில் தபோவனம் பெளத்த தரிசனம்

என்கிறார்.

தவறான எண்

இல்லாத ஒன்றில் இங்கு என்னதான் நாம் தேடுகிறோம்

இனியும் இப்படியே எவ்விதம் இவ்விதமாக எப்படி இருக்க முடியும்

இப்படி நீள்கிறது இவரின் கவிதைகள்

படித்தால் தான் நுகர முடியும்,

நான் ஒரு சாதரணமானவன் எனக்கு தோன்றியதை இங்கு  எழுதினேன்,

இவரின் கவிதைகளை முழுவதுமாக உணர்ந்தேனானு இனி போக போகத்தான் தெரியும்,

அன்று நான் மறுபடியும் பிரிக்கும் போது தான் உணர்வேனோ தெரியல,

இத்துடன் என் எண்ணங்களுக்கு விடை கொடுக்கிறேன்,

நண்பர் தவசியின் கவிதைகள் சாகாக வரம் பெற்றவை,

இந்த புத்தகத்தை அன்பளிப்பாக தந்த அவருக்கு நன்றி,

,,

மறுபடியும் அமிர்தம் சூர்யாவுக்கு நன்றி

நண்பரை அறிமுகப்படுத்தியவராயிற்றே,

என்றோ ஒரு நாள் நீங்க இந்த கவிதைகளை எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் படிக்க நேரிடலாம்,

அந்த நாட்கள் வெகு தூரத்தில் இல்லை

அன்புடன்

-உமாகாந்தன்  

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...