டபுள் டக்கர் பஸ்” . ரெடியா இருங்க..சென்னை மக்களுக்கு குட்நியூஸ்

 டபுள் டக்கர் பஸ்” . ரெடியா இருங்க..சென்னை மக்களுக்கு குட்நியூஸ்

சென்னை மக்களுக்கு குட்நியூஸ் சொல்லி உள்ளது தமிழக அரசு.. விரைவில் டபுள்டக்கர் பஸ் வரப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டபுள்டக்கர் பஸ் என்றாலே சென்னைவாசிகளிடம் 90களில் மிகவும் பேமஸ்.. இரண்டடுக்கு பேருந்துகள் என்பார்கள்.. அல்லது மாடிப்பேருந்துகள் என்றும் சொல்வார்கள்.

கடந்த 1997ல் இந்த டபுள்டக்கர் பஸ் அறிமுகம் செய்யப்பட்டது.. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த டபுள்டக்கர் பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

முழுமையான குளிர்சாதன வசதியுடன் இந்த பஸ் இருக்கும்… சாதாரண பஸ்கள் பயன்படுத்தும் பரப்பளவையே இந்த பஸ்ஸும் எடுத்துக்கொள்ளும்.. ஆனால் இரண்டடுக்கு பஸ்களில், இரண்டு மடங்கு பயணிகள் பயணிக்கலாம்.. அந்தவகையில், மின் கம்பிகள் இல்லாத, மரங்கள் தாழ்வாக இல்லாமல் இருக்கும் சாலைகள் எங்குள்ளது என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு பிறகே டபுள் டக்கர் பஸ்கள் விடப்பட்டன.. இதற்கு சென்னை மக்கள் பெரும் வரவேற்புகளை தந்தார்கள்.. நிறைய சினிமாக்களில் இந்த டபுள் டக்கர் பஸ் காட்சிகள் இடம்பெறும் அளவுக்கு கூடுதல் மவுசு இந்த டபுள்மாடி பஸ்ஸுக்கு எகிறியது.

பிரம்மாண்டம்: அதுமட்டுமல்ல, சென்னையில் 18A என்ற தாம்பரம் முதல் பிராட்வே வரை செல்லும் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்கள்தான் 15 வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்தன… சென்னையின் முக்கியமான பகுதிகளை இந்த பஸ் கடந்து சென்றதால், இதில் பயணிக்க சுற்றுலா பயணிகளே அப்போது அளவுக்கு அதிகமாக ஆர்வம் காட்டினார்கள். அந்த அளவுக்கு “பிரம்மாண்டத்தை” இந்த பஸ் பெற்றிருந்தது. ஆனாலும், இந்த பஸ்ஸை இயக்குவதில் ஒரு சிக்கல் எழுந்தது.. அதிகபட்சமாகவே இந்த வகை பஸ்கள், 50 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே இயக்கப்படும்.. அதற்கு மேல் ஓட்டினால் கவிழ்ந்து விடும் அபாயம் இருந்தது. மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததாலும், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களாலும், டபுள் டக்கர் பஸ் சேவையை தொடர முடியாமல் போனது.. எனவே, 2008-லேயே இந்த பஸ்ஸின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

மறுபடியும் இந்த பஸ்ஸை கொண்டுவரப்போவதாக, கடந்த வாரம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி தந்திருந்தார்.. இதற்கான பேச்சுவார்த்தையும் ஆரம்பமாக போவதாகவும் சிவசங்கர் தெரிவித்திருந்தார். ஆனால், சென்னையில் எதன் அடிப்படையில் டபுள் டக்கர் பேருந்து சேவையை இயக்குவது? சுற்றுலாத்தலங்களை இணைக்கும் வகையில் இந்த சேவையை கொண்டு வரலாமா? என்பது குறித்தெல்லாம் இனிமேல்தான் ஆய்வு செய்யப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில்,

டபுள் டக்கர் பஸ் சேவை மறுபடியும் வரப்போகிறதாம் சென்னையில் எதன் அடிப்படையில் டபுள் டக்கர் பேருந்து சேவையை இயக்குவது என்றும் சுற்றுலாத்தலங்களை இணைக்கும் வகையில் இந்த சேவையை கொண்டு வரலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்..

எனினும், இதுதொடர்பான விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. இந்நிலையில், அதற்கான ஆய்வையும் தற்போது போக்குவரத்து அதிகாரிகள் துவங்கிவிட்டார்களாம்.. சென்னையில் டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்குவதற்காக சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகளிலும் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. குறிப்பாக, மின்சார கம்பிகள் அதிகம் இல்லாத, அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தில் இவ்வகை பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்..

சோதனை ஓட்டம்:

அதேபோல, மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். ஏற்கனவே மும்பை, டெல்லி உள்ளிட்ட சில இடங்களில் டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்பட்டு வரும்நிலையில், சென்னைக்கும் இந்த சேவை வரப்போகிறது.

இந்த புதிய டபுள் டக்கர் பஸ்கள் எல்லாமே ஏசி பஸ்களாக இருக்கும் என்கிறார்கள்.. இப்போது எந்த ரூட் என்று முதல்கட்டமாக முடிவு செய்துள்ளதால், டபுள் டக்கர் பஸ்களை தயாரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் துரிதமாகிறது.. மெமரீஸ்: எப்படியும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் இந்த டபுள் டக்கர் பஸ்கள் சென்னையில் வலம் வர வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்

. 15 வருடங்கள் கழித்து மீண்டும் டபுள்டக்கர் பஸ் வருவது, சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, பழைய இனிப்பான நினைவுகளையும் சேர்த்தே கிளறிவிடும் என்றும் நம்பப்படுகிறது.

uma kanthan

1 Comment

  • ஆவலுடன் காத்திருக்கிறோம். மலரும் நினைவுகளுடன் மாடிபஸ்ஸில் பயணிக்க. மாநகர போக்குவரத்து கழக நிர்வாகிகளுக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்.
    🙏🙏🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...