விரைவில் சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ்..!
சென்னை: வரும் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய நாட்களில் சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சனிக்கிழமை காலை மட்டும் பொதுமக்கள் இலவசமாக கார் ரேஸை பார்ப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் முதன்முறையாக ஃபார்முலா 4 கார்பந்தயம் நடத்த கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. […]Read More