திருஷ்டி கழியும் போகி பண்டிகை..

 திருஷ்டி கழியும் போகி பண்டிகை..

விடிந்தால் போகி பண்டிகை.

திருஷ்டி கழியும் போகி பண்டிகை..

அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும்.

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம்.

இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் “ருத்ர கீதை ஞான யக்ஞம்” என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் நம்முடைய தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

பல்வேறு தெய்வீக குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.

தை மாதம் பிறந்து நம்வாழ்வில் நல்வழி பிறக்க, மார்கழி நிறைவு பெறும் நாளில்,நாளை வரும் போகிபண்டிகையன்று, அனைவரும்
இறைவனையும்,நம் முன்னோர்களையும் வணங்கி, தைமாதத்தை மகிழ்ச்சியுடன்
வரவேற்று, தமிழர் திருநாளை மனமகிழ்வுடன் கொண்டாடி மகிழ்வோம்…

நூலாம்படையில்
கொண்டாடிக்கொள்ளட்டும் சிறுபூச்சிகள்

சில பழையன கழிக்க முடியாத போகி
எல்லோருக்குள்ளும்
பத்திரமாகவே இருக்கிறது.

பொக்கிசங்களை
போவென ஒழிக்க முடியாதுதான்.😘😘

போகித்திருநாள் வாழ்த்துகள்!

பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டு பொங்கல்

நிரந்தரமாக தங்கட்டும்
நிம்மதி சந்தோஷம் நம் அனைவரின் வீட்டிலும் மனதிலும

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...