டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் ஜோ பைடன் தங்க உள்ளார். டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். ரஷ்யா சார்பில் புதின் பங்கேற்கவில்லை. புதினுக்கு பதிலாக […]Read More
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்…உள்வாங்கியது கடல்! | தனுஜா ஜெயராமன்
தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது.. தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது. ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அப்பகுதியில் சுமார் 50 கிலோ மீட்டர் கடல் உள்வாங்கியுள்ளது. தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் தங்களின் படகுகளின் பாதுகாப்பு கருதி துறைமுகங்களில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து […]Read More
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, கேரளாவில் உள்ள புதுபள்ளி, மேற்கு வங்காளத்தில் உள்ள துப்குரி, ஜார்க்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவில் உள்ள போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று இருந்தது. உத்தர பிரதேசத்தில் மீண்டும் தொகுதியை கைப்பற்ற விரும்புகிறார் அகிலேஷ் யாதவ். ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. […]Read More
ஜி20 உச்சி மாநாடு! தமிழ்நாடு முதல்வரின் டெல்லி பயணம்…
செப்டம்பர் 9 இல் டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். டெல்லி பாரத் மண்டபத்தில் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் முதல்வர் பங்கேற்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதில் கலந்து கொள்ள உள்ளார். 2023 G20 உச்சிமாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மையத்தில் (ICapanvent International Exhibition) நடைபெற உள்ளது. இது G20 (Group of Twenty) உச்சிமாநாட்டின் பதினெட்டாவது கூட்டமாகும். இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் ஜி20 […]Read More
75 ஆசிரியர்களுக்கு ‘நல்லாசிரியர் விருதை’ வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசியர்களுக்கு, ‘தேசிய நல்லாசிரியர் விருதை’ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது. அன்று நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை டெல்லியில் உள்ள […]Read More
‘ஸ்லீப் மோட்’ என்ற நிலைக்கு செல்லும் சந்திரயான் – 3! | தனுஜா
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த ஜூலை விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் 615 கோடி ரூபாய் செலவில் கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவியது. தொடர்ந்து கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல்நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா […]Read More
வானிலையில் மாற்றம்.., வங்கக்கடலில் உருவாகும் புது காற்றழுத்த தாழ்வு பகுதி!
அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் […]Read More
முதல் புவி சுற்றுவட்டபாதையை உயர்த்திய இஸ்ரோ! – ஆதித்யா எல்-1
சூரிய ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல் புவி சுற்றுவட்டபாதை வெற்றிகரமாக இன்று உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ சார்பில் கூறப்பட்டுள்ளது. சூரியனின் மேல்வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்யும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு 125வது நாள் பயணம் செய்து சூரியன் ஆய்வை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது 125வது நாளில் ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் […]Read More
ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று பிரதமர்
அரசு முறைப் பயணமாக தென்னாப்ரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி இன்று காலை பெங்களூரு திரும்பினார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பெங்களூரு வந்தடைந்த பிரதமர் மோடியை பெங்களூரு அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். அங்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர் மோடி சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது தாம் தென்னாப்ரிக்காவில் இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் […]Read More
காவிரி ஆற்றில் இறங்கி கர்நாடகா விவசாயிகள் தொடர் போராட்டம்!
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து ஆற்றில் இறங்கி கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகா விவசாயிகளின் இப்போராட்டத்தால் மாண்டியாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை சொற்ப அளவில் கர்நாடகா கடந்த சில நாட்களாக திறந்துவிட்டு வருகிறது. மாண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), மைசூரி கபினி அணைகளில் இருந்து இந்த நீர் திறக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என கடந்த 5 நாட்களாக கன்னட […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!