டெல்லி வந்தார் ஜோ பைடன்.. (ஜி 20 மாநாடு)

 டெல்லி வந்தார் ஜோ பைடன்.. (ஜி 20 மாநாடு)

டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் ஜோ பைடன் தங்க உள்ளார்.

டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். ரஷ்யா சார்பில் புதின் பங்கேற்கவில்லை. புதினுக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்கிறார்.

இதேபோல் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், சீனா அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் என ஏராளமான தலைவர்கள் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கின்றனர். டெல்லிக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள முக்கியமான நட்சத்திர விடுதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தற்போது உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் தலைவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜோ பைடன் டெல்லியில் உள்ள பிரபலமான ஐடிசி மவுரியா, ஓட்டலில் தங்க உள்ளார். ஜோ பைடன் மற்றும் அவருடன் வரும் அதிகாரிகள் குழு, பாதுகாப்பு குழு ஆகியோர் தங்குவதற்காக மொத்தம் 411 அறைகள் ஐடிசி மவுரியாவில் புக் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை 6.55 மணியளவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்திற்கு ஏர்போர்ஸ் ஒன் என்ற தனி விமானம் மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்திறங்கினார். தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் தங்க வைக்கப்பட உள்ளார். புதுடெல்லியில் உள்ள சாணக்கியாபுரி பகுதியில் இருக்கும் ஐடிசி மவுரியா ஓட்டலில் தங்குகிறார். அமெரிக்க சீக்ரெட் படையினர் ஹோட்டலில் அனைத்து தளங்களிலும் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகின்றனர். ஹோட்டலுக்கு வெளியேயும் உள்ளேயும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதே விடுதியில் அமெரிக்க முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் டபிள்யூ. புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆகியோர் தங்கியுள்ளனர்.

ஜோ பைடன் வருகையை ஒட்டி ஐடிசி ஹோட்டல் வளாகத்தை அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். ஜோ பைடன் ஓட்டலின் 13-வது தளத்தில் தங்க உள்ளார். அவர் செல்வதற்காக தனியாக ஒரு பிரத்யேக லிப்ட் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. ஐடிசி மவுரியா ஓட்டலின் ஒவ்வொரு தளத்திலும் அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் எனப்படும் ரகசிய சேவை பிரிவின் கமோண்டாக்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர். அதேபோல், மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கிளாரிட்ஜ்ஸ் ஓட்டலில் தங்க உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இம்பிரியல் ஓட்டலில் தங்க உள்ளார். சீன பிரதமர் தாஜ் பேலஸ் ஓட்டலில் தங்க உள்ளார். தலைவர்களின் வருகையை முன்னிட்டு டெல்லி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது என்று சொல்லும் அளவுக்கு பரப்பாக காட்சி அளிக்கிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...