நகரில் இன்று
புற்றுநோய் மரபணு வரைபடம்: சென்னை ஐஐடி வெளியீடு..!
புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- உலக அளவில் மிக ஆபத்தான உடல்நல பிரச்சினைகளில் ஒன்று புற்றுநோய். இந்தியாவில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. தற்போது புற்றுநோய் பாதிப்புடன் 14.61 லட்சம் பேர் வாழ்ந்து வருவதாக தேசிய புற்றுநோய் […]
சென்னையில் விமான சேவை பாதிப்பு..!
சென்னையில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம் பாக்கம் உள்ளிட்ட புறநகர் முழுவதும் பனி சூழ்ந்துள்ளதால் வாகன ஒட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணி ஆகியும் பனிப் பொழிவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். மேலும் எதிரில் வரும் ஆட்களே தெரியாத அளவிற்கு பனிப்பொழுவு […]
வடசென்னை வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு..!
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் வீட்டுவசதி, நகராட்சி நிர்வாகம், எரிசக்தி, மருத்துவம், உள்துறை சார்பில் 2-ம் கட்டமாக ரூ.1,383 கோடியில் 79 புதிய திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும் 29 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி, வால்டாக்ஸ் சாலை தண்ணீர் தொட்டி தெருவில் கடந்த டிச.4ம் தேதி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, வடசென்னை வளர்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று […]
ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான அகிலன் நினைவு தினமின்று.
ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான அகிலன் நினைவு தினமின்று.😢 நவீன தமிழ் இலக்கியத்தில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்தவர் அகிலன் என்று அழைக்கப்படும் பி.வி.அகிலாண்டம். இவர் 1922 ஜூன் 27-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்த பிறகு, அம்மா கடினமான சூழலில் இவரைப் படிக்க வைத்தார். பள்ளிப் பருவத்தில் ‘சக்தி வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி புறக்கணிப்பு போன்ற […]
பிப்.3-ல் திமுக அமைதிப் பேரணி..!
முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு நாளை ஒட்டி பிப்.3-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “காஞ்சி தந்த காவியத் தலைவர் – உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலுவீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர் தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை […]
“ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை…!
ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆட்டோ சங்கங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருந்தன. அதன்படி, ஆட்டோவில் பயணம் செய்வோர் முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ. 50, அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ. 18 என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் இரவு நேரங்களில் பயணித்தால் பகல் நேரத்தைவிட கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இது அடுத்த மாதம் (பிப்ரவரி) […]
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு..!
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜன.25ஆம் தேதி நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல் 19 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, முதல்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக மீண்டும் 19 மாவட்ட […]
ஜெயலலிதாவின் நகைகளை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவு..!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1562 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்கள் ஆகியவற்றை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் தண்டிக்கப்பட்ட அவர், உயர்நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டார். 2016ல் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அவருக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் கைவிட்டது. ஆனால், மற்ற […]
2,404 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்..!
சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மயிலாடுதுறையில் மற்றும் நாகப்பட்டினத்தில் 8 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 7 கோடியே 47 லட்சத்து 21 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 25 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து […]
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில்
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார் சத்துணவு அமைப்பாளரும், பிரபல நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19, 2025) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க.) முறைப்படி இணைந்தார். மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திமுகவில் இணைந்த சத்துணவு அமைப்பாளர் திவ்யா! இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி டிஆர் பாலு, அமைச்சர்கள் பிகே சேகர் பாபு, நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். […]