Tags :சாய்ரேணு

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 7 | சாய்ரேணு

7. பாட்டரி விளக்கு “காணுமா? என்ன சொல்றீங்க?” என்று குழம்பிய தர்மா “முதல்ல உட்காருங்க. என்ன நடந்ததுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” என்றான். “அதுக்கெல்லாம் நேரமில்லை சார். அவங்களைக் காணோம்! திடீர்னு விழிப்பு வந்தது. பார்த்தா… பர்த் எம்டியா இருக்கு! எங்கிட்ட சொல்லாம எங்கியும் போக மாட்டாங்க சார்! சரி, ரெஸ்ட் ரூம் போயிருக்காங்களோன்னு அங்கேயும் போய்த் தேடினேன். அங்கெல்லாம் இல்லை சார்…” ஷான் அழுதுவிடுவாள் போல் காணப்பட்டாள். கையில் பாட்ட்டரி விளக்கு வைத்திருந்தாள். “டென்ஷன் ஆகிக்காதீங்க! […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 6 | சாய்ரேணு

6. சோப்பு “ஹாட் சூப்ஸ் – டொமாட்டோ, வெஜிடபிள், மின்ஸ்ட்ரோன், அவகாடோ கார்ன். ஃப்ரெஷ் ஜூஸஸ் – ஆரஞ்ச், ஆப்பிள், வாட்டர்மெலன், பொமோக்ரானெட், க்ரேப்ஸ், லெமன்” என்று ஒப்பித்து முடித்த பேரர் “காஃபி?” என்ற கலிவரதனின் கேள்வியால் கோபப்பட்டிருப்பாரோ என்னவோ, வெளியே ஒன்றும் தெரியவில்லை. அதே மெஷின்தனமான குரலில் “யெஸ் சார், காஃபி, சாய், மசாலா சாய், மில்க், பாதாம் மில்க், பெப்பர் ஹல்தி மில்க், லெமன் மிண்ட் டீ” என்றார். “காஃபி” என்றார் கலிவரதன். பேரர் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 5 | சாய்ரேணு

5. கூந்தல் எண்ணெய் அதே நாள். சில மணிநேரம் முன்பு. “ஏய் சாந்தினி! அசமந்தம்! இன்னைக்கு ராத்திரி ட்ரெயின் ஏறணும், சீக்கிரம் சாமானையெல்லாம் எடுத்துவைன்னு நாலு நாழியா கத்தறேன், நீ அசையவே இல்லை! கடைசில சாமானையெல்லாம் நானும் உன் அம்மாவுமே எடுத்து வெச்சுட்டோம். சரி, நீயாவது ரெடி ஆகிக்கக் கூடாதா? இன்னும் குளிக்கக்கூட இல்லை. வந்து உட்கார், எண்ணெய் தடவித் தலைவாரி விடறேன்…” பாட்டியின் அழைப்புக்குப் பதில் வராமல் போகவே “அந்த செல்போன்ல அப்படி என்னதான் இருக்கோ? […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 5 | சாய்ரேணு

4. சிறுகத்தி தன்னுடைய வெற்றிலைப் பெட்டியைத் திறந்து, கொட்டைப் பாக்கைச் சிறு கத்தியால் சீவி, சுண்ணாம்பு தடவப்பட்ட துளிர் வெற்றிலையில் அன்புடன் வைத்துக் கொண்டிருந்தார் சுப்பாமணி. வெளியே ஏதோ சப்தம் கேட்டு ஜன்னல் வழியே பார்வையைப் போட்டவர், அதிர்ந்தார். ப்ரிஜேஷின் சட்டை ஒரு பெண்ணின் கைகளில் கொத்தாக மாட்டியிருந்தது. (சட்டைக்குள் ப்ரிஜேஷ் இருந்தான்.) வெளியே பாய்ந்தார் சுப்பாமணி. கம்பார்ட்மெண்ட்டுக்கு எதிரே அதற்குள் கூடிவிட்ட சிறு கூட்டத்தைப் பிளந்துகொண்டு ப்ரிஜேஷ் அருகில் சென்றார். “என்ன… என்ன பிரச்சனை? எதுவாயிருந்தாலும் பேசித் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 4 | சாய்ரேணு

3   ஆடை “வணக்கம் மேம். நீங்க காலேஜ் புரொஃபஸர் இராணி கந்தசாமி தானே?” என்று கேட்டாள் அந்த இளம்பெண். பளீரென்ற தோற்றம். அழகான, பொருத்தமான ஆடை. இராணிக்கு அவளைக் கண்டதுமே பிடித்துப் போய்விட்டது. “வரும் ஆனா வராதுன்னு நீங்கள்ளாம் ஒரு ஜோக் சொல்வீங்களே, அந்த மாதிரி உன் கேள்விக்குப் பதில் – ஆமா ஆனா இல்லை!” என்றாள் இராணி கந்தசாமி புன்னகையுடன். அந்தப் பெண் விழித்தாள். “நான் காலேஜ் புரொபஸர்தான், ஆனா இப்போ ரிடையர் ஆகிட்டேன்” என்றாள் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 3 | சாய்ரேணு

2. கண்ணாடி ஆங்காங்கு கிழிந்து தைத்திருந்ததைப் போன்று ஜீன்ஸ். விலையுயர்ந்த டீ-ஷர்ட். முதுகில் திம்மென்று ஏறியிருந்த பேக்-பேக். கையில் அதக்கியிருந்த ஐஃபோன். ஒற்றைக் காதில் அணிந்திருந்த ப்ளூடூத். உச்ச டெஸிபலில் பேச்சு. கண்ணைவிட்டு அகலாத குளிர்கண்ணாடி. இளம்பெண்களை மட்டுமே கவனிக்கும் பார்வை. வெளிநாட்டு இறக்குமதிக் காரில் சென்னை சென்ட்ரலுக்கு வந்து இறங்கிய அந்த மூன்று இளைஞர்களுக்கும் மேற்சொன்ன அடையாளங்கள் பொருந்தின. அவர்களில் நடுநாயகமாக வந்துகொண்டிருப்பவன் ப்ரிஜேஷ். ப்ரிஜேஷ்? சங்கரின் மகன். அவனோடு வரும் இருவரும் – அஜய், […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 2 | சாய்ரேணு

தொடரின் அறிமுகத்தைத் தவற விட்டவர்களுக்காக… அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் பயணிக்கும் நளினா, ஒரு மர்ம நபரால் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுகிறாள். அவர் கேட்கும் கவருக்குப் பதிலாக போலிக் கவரைத் தருகிறாள். அவர் எதிர்பாராதவிதமாக அவளைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவள் உடைமைகளை ஆராய்ந்து உண்மையான கவரைக் கைப்பற்றுகிறார். சரியான ஓரிடத்தில் அவள் உடலை ரயிலிலிருந்து வீசியெறிகிறார். அவள் உடைமைகளை சேகரித்துக் கொண்டு அதே ரயிலிலேயே பயணிக்கிறார். சென்னையில் அவளை கம்பார்ட்மெண்ட்டில் காணாமல் ஏமாற்றமடைகிறான் ஓர் இளைஞன். நாட்டியத் தாரகையான நளினாவை […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 1 | சாய்ரேணு

டிக்கெட் [மின்கைத்தடி வாசகர்கள் அனைவருக்கும் அகமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள். இதோ நாம் ஒரு பயணம் புறப்படுகிறோம். கற்பனையெனும் இரயிலில் கதையெனும் தடங்களில் பயணிக்கப் போகிறோம். அந்தப் பயணத்தின் டிக்கெட் இந்த அத்தியாயம். அடுத்த அத்தியாயத்திலிருந்து பயணம் ஆரம்பிக்கிறது.] மூன்று ஆண்டுகளுக்கு முன்பு… “தடக் தடக் தடக் தடக் தடக்” என்ற லயம் கேட்டது. ஒலி கேட்டது ரேடியோவிலோ, எம்பி3 ப்ளேயரிலோ அல்ல, அனந்தபுரி எக்ஸ்ப்ரஸ் சென்னையை நோக்கி விரையும் வேகத்தின் தாளப் பிரமாணத்தைத் தண்டவாளத்தில் வாசிக்கும் ஒலி […]Read More