புவனேஸ்வரம்: தவறான திசையில் வாகனத்தை ஓட்டி வந்தால் டயரை பங்சராக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது என்று புவனேஸ்வர் காவல் ஆணையம் முடிவு செய்துள்ளது. முதல் முறையாக இந்த தொழில்நுட்பம் புவனேஸ்வரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி, சாலைகளில் வேகத் தடுப்பு போன்று ஸ்பைக் பேரியர்கள் பொருத்தப்படும். இது எதிர் அல்லது தவறான திசையில் வரும் வாகனங்களின் டயர்களை கிழித்து பங்சராக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக எஸ்பிளனேட் ஒன் மால் பகுதியில் இந்த டையர் […]Read More
Tags :ம சுவீட்லின்
அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், செல்லூர் ராஜூ கருத்து…..!! நடிகர் விஜய் வீட்டில் நடைபெறும் வருமானவரி சோதனை குறித்து அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், செல்லூர் ராஜூ ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். வருமானவரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகள் உள்பட 35 இடங்களில் வருமானவரித் துறையினர் நேற்று (புதன்கிழமை) சோதனை செய்தனர். இதில் இரு திரைப்பட நிறுவனங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனை […]Read More
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பொதுத்தோ்வு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு கல்வியாளா்கள், பெற்றோா், ஆசிரியா்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா். பேராசிரியா் தி.ராசகோபாலன்: ஐந்தாம் வகுப்புக்கு பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டது நல்லது. ஏனெனில் அந்த வயதில் மாணவா்களுக்கு தோ்வு குறித்த எந்தவித புரிதலும், முதிா்ச்சியும் இருக்காது. அதேவேளையில் எட்டாம் வகுப்புக்கு தோ்வு வைத்திருக்கலாம். ஏனெனில் அந்தக் காலத்திலேயே எட்டாம் வகுப்புக்கு இ.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு இருந்தது. அதன் மூலம் தரமான மாணவா்கள் […]Read More
பேருந்து வசதி கோரி விருத்தாசலம் அரசுக் கல்லூரி மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில், விருத்தாசலம் செல்லும் அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர், கல்லூரி நேரத்தில் பேருந்துகள் இயக்கக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து, விருத்தாசலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில், ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து காலை ஏழு முப்பது […]Read More
கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக 3ஆவது நபர் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், காசர்கூடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த நபர் கஞ்சங்கூடு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இவர் சமீபத்தில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து திரும்பியவர் ஆவார். […]Read More
வேதாரண்யம்: கோடியக்கரை படகுத்துறையில் இருந்து கடலுக்குள் சென்ற பாம்பன் மீனவர்கள் உள்பட 8 பேரை படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் நடைபெற்று வரும் மீன்பிடிப் பருவத்தையொட்டி பல்வேறு மாவட்ட மீனவர்கள் தற்காலிகமாக தங்கி மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். அந்த வகையில், பாம்பன் , தெற்கு வாடி பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாம் மகன் மரிய ஜுன்கட்டார் (28) என்பவருக்கு சொந்தமான ஐ.என்.டி.டி என் – […]Read More
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து கூட்ட அரங்கத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன் தெரிவித்தது: காவிரி […]Read More
மூத்த நடிகரும் பாடகருமான டி.எஸ். ராகவேந்தர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75. வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்துப் புகழ் பெற்றார் டி.எஸ். ராகவேந்தர். உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகவேந்தர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். வைதேகி காத்திருந்தாள் படத்துக்குப் பிறகு சிந்து பைரவி, சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அவருடைய மகள் கல்பனா […]Read More
மதுரை: தமிழகத்தின் முதல்வராக நடிகா் ரஜினிகாந்த் துடிப்பதாக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். மதுரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சாா்பில் பழனி பாபா நினைவேந்தல் அரசியல் விழிப்புணா்வு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சீமான் சிறப்புரையாற்றியது: நாட்டை பேரழிவை நோக்கி மத்திய, மாநில ஆட்சியாளா்கள் கொண்டு செல்கின்றனா். வளரும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 47ஆவது இடத்திலும் இந்தியா 62-ஆவது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் நடிகா் ரஜினிகாந்தை வைத்து நாடகம் அரங்கேறுகிறது. தூத்துக்குடி போராட்டக் களத்தில் […]Read More
குரூப்-4 தேர்வில் முறைகேடாக தேர்வெழுதிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்தவரை செல்ஃபோன் சிக்னல் மூலம் சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு செப்.1-ஆம் தேதி நடத்திய குரூப்-4 தோ்வின் தரவரிசை பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் தோ்வெழுதிய தோ்வா்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றனா். இது குறித்த புகாரைத் தொடா்ந்து சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. […]Read More