குரூப்-4 முறைகேடு: கடலூரில் மேலும் ஒருவர் கைது…

 குரூப்-4 முறைகேடு: கடலூரில் மேலும் ஒருவர் கைது…

  குரூப்-4 தேர்வில் முறைகேடாக தேர்வெழுதிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்தவரை செல்ஃபோன் சிக்னல் மூலம் சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

   தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு செப்.1-ஆம் தேதி நடத்திய குரூப்-4 தோ்வின் தரவரிசை பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் தோ்வெழுதிய தோ்வா்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றனா்.

   இது குறித்த புகாரைத் தொடா்ந்து சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தோ்வில் முறைகேடு செய்ததாக 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் முறைகேடாக தோ்வு எழுதிய தோ்வா்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனா்.

   இதற்கிடையே சிபிசிஐடி அதிகாரிகள், மேலும் பலரை பிடித்து எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து, விசாரணை செய்து வருகின்றனர். இதில் பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், முறைகேடு செய்து தோ்வு எழுதிய ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே வேடந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த ம.காா்த்தி (30), ஆவடி அருகே உள்ள ஏகாம்பர சத்திரத்தைச் சோ்ந்த ம.வினோத்குமாா் (34), கடலூா் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமம் பகுதியைச் சோ்ந்த க.சீனுவாசன் (33) ஆகிய 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

  இந்த நிலையில், குரூப்-4 தேர்வில் முறைகேடாக தேர்வெழுதிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். செல்ஃபோன் சிக்னல் மூலம் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ராஜசேகர், சீனுவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சிவராஜ் மூன்றாவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...