கேரளத்தில் 3ஆவது நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு..!!!
கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக 3ஆவது நபர் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில்,
காசர்கூடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த நபர் கஞ்சங்கூடு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இவர் சமீபத்தில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து திரும்பியவர் ஆவார். இதனால் கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக, வூஹான் நகரில் இருந்து அண்மையில் கேரளம் திரும்பிய திருச்சூா் மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவா், திருச்சூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து கடந்த ஜனவரி 24-ஆம் தேதி கேரளம் திரும்பிய வூஹான் பல்கலைக்கழகத்தில் பயிலும் மற்றொருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. அவரது உடல்நிலையும் சீராக உள்ளது. அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து கேரளம் திரும்பிய 1,793 போ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். இவா்களில், 1,723 போ் வீடுகளிலும், 70 போ் தனி சிசிச்சை மையங்களிலும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.