இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்(76) அமெரிக்காவில் காலமான நாள் இன்று! 2018

உலகெங்கிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே மிகுந்த உத்வேகத்தையும் நம்பிக்கையையும் தன் வாழ்க்கை மூலமும் பேச்சின் வழியாகவும் பரப்பிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், பிரபஞ்சம் குறித்த ஆய்வு மேற்கொண்டு பிரபலமானவர்.😰 நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர், பிரபஞ்ச கருங்குழி குறித்தும் ஆய்வு மேற்கொண்டாராக்கும்.

✍🏻1942ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர். இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும் அதீத ஈடுபாடு உடையவர். அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகியன இவரது முக்கிய ஆய்வுத்துறைகள்.

தனது இளம்வயதிலேயே நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்டு, கை கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புகளுக்கு உள்ளானார். பல அறிவியல் குறிப்புகள் உட்பட உலகம் முழுவதும் விற்பனையில் சிறந்து விளங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார். அனைவரும் அறிவியலை அறிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் அமைந்திருப்பது இவரது எழுத்துகளின் தனிச்சிறப்பு.

கீழ்நோக்கி உங்கள் பாதத்தைப் பார்க்காதீர்கள், மேல்நோக்கி நட்சத்திரங்களைப் பாருங்கள்.

எப்படியாயினும் கடினமான வாழ்க்கை உருவாகலாம், அங்கு எப்போதும் உங்களால் செயல்பட மற்றும் வெற்றிபெற முடிந்த ஏதாவது இருக்கும்.

நமது பேராசை மற்றும் மூடத்தனத்தின் மூலம் நாம் நம்மை அழித்துக்கொள்ளும் அபாயத்தில் இருக்கிறோம்.

நாம் அறிவியலைப் புரிந்துகொள்வதற்கு முன், இந்த பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது என்று நம்புவது இயற்கையானதே.

இந்த பிரபஞ்சத்தை விட பெரியது அல்லது பழமையானது எதுவுமில்லை.

நமது நடவடிக்கையின் உயரிய மதிப்பினை நாம் தேடிப்பெற வேண்டும்.

அமைதியான மக்கள் சத்தமான மனதைக் கொண்டிருக்கிறார்கள்.

மனித முயற்சிக்கு எவ்வித எல்லைகளும் இருக்கக்கூடாது.

நீங்கள் எப்போதும் கோபமாகவோ அல்லது குறை கூறிக்கொண்டோ இருந்தால், உங்களுக்கான நேரம் மற்றவர்களிடம் இருக்காது.

உழைப்பு உங்களுக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுக்கின்றது. உழைப்பு இல்லாத வாழ்க்கை வெறுமையானது.

வாழ்க்கை வேடிக்கையானதாக இல்லாமல் இருந்தால் துன்பம் நிறைந்ததாக இருக்கும்… இது போன்ற அர்த்தம் நிறைந்த விஷய்ங்களை நமக்கு விட்டு சென்ற

பிரமிப்பூட்டிய விஞ்ஞானி-க்கு அஞ்சலி😰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!