இன்றைய முக்கிய செய்திகள்
12ம் வகுப்பு பாடத்திட்டத்தை படித்தாலே நீட் தேர்வில், 80 சதவீதம் தேர்ச்சி அடையலாம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நீட் தேர்விற்காக அரசு சார்பில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் அளிக்கக்கூடிய வகையில் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு – பலி எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு
“விரைவில் நகரும் ரேஷன் கடைகள்” – பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
8,888 சீருடைப் பணியாளர்கள் பதவிகளுக்கான தேர்வில் முறைகேடு. சிபிஐ விசாரணை கோரி 15 விண்ணப்பதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு.
குரூப் 4 தேர்வு முறைகேட்டைவிட பெரிய முறைகேடு என மனுவில் தகவல்.தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்களுக்கு முறைகேடாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குற்றச்சாட்டு.
குடியுரிமை சட்டத்தால், தமிழ்நாட்டில் பிறந்த எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை.மத்திய அரசுதான் முடிவெடுக்கும் சூழலில் உள்ளது; மத்திய அரசிடம் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்துங்கள். குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது; தமிழக அரசிடம் இல்லை – முதலமைச்சர் பழனிசாமி.
நாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால் பரபரப்பு.வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் நீரில் மூழ்கியது.வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
சென்னையில் பெட்ரோல் விலை, 5 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.74.68க்கும், டீசல் விலை, 5 காசுகள் குறைந்து, ரூ.68.27க்கும் விற்பனை.