முதலாவது விமான அஞ்சல் சேவை
முதலாவது அதிகாரப்பூர்வமான விமான அஞ்சல் சேவை பிப்ரவரி 18, 1911 அன்று இந்தியாவின் அலகாபாத்தில் ஆரம்பமானது.
அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தது பிரிட்டிஷார், விமானப் பயண சாகசத்தை சாத்தியமாக்கியது அமெரிக்கர்கள் என்றாலும் விமானத்தில் அஞ்சல் சேவையைத் தொடங்கியவர்கள் இந்தியர்கள் என்றால் வியப்பாக இல்லையா?
இப்போதைய உத்தரப் பிரதேசத்தின் அலாகாபாத் நகரில்தான் அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
அலகாபாத் புறநகரில் உருவாக்கப்பட்டிருந்த கண்காட்சித் திடலிலிருந்து…
1911-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியன்று மாலை 5.30 மணிக்கு 6500 கடிதங்கள் அடங்கிய அஞ்சல் பைகளுடன் விமானம் புறப்பட்டது.
ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு நைனிடாலில் படித்துக் கொண்டிருந்த இருந்த தனது மகன் ஜவஹர்லாலுக்கு எழுதிய ஒரு கடிதமும் அதில் ஒன்று ஆகும். ஆயிரக்கணக்கான மக்கள் வியப்பும் மகிழ்ச்சியும் முகங்களில் ஒருசேர அந்த விமானம் தரையிலிருந்து புறப்பட்டதையும் விண்ணில் ஏறிப் பறப்பதையும் கண்கொட்டாமல் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துக்கொண்டே நின்றனர்.
அந்த விமானம் யமுனைமீது பறந்து நைனி சந்திப்பு அருகே தரையிறங்கியது.
அலாகாபாத் புறநகரில் இருந்த அந்த இடத்தில்தான் நைனி மத்திய சிறைச் சாலையும் இருந்தது.
12 கிலோ மீட்டர் தொலைவுள்ள அந்தப் பயணத்துக்கு வெறும் 13 நிமிஷங்களே பிடித்தன.
அங்கே தரையிறங்கியதும் அஞ்சல் பை எடுக்கப்பட்டு அதிலிருந்தவை தரை, கடல், ரயில் என்று எல்லா வழிகளிலும் உரியவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.