முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் வெட்டிக் கொலை..!!!!

 முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் வெட்டிக் கொலை..!!!!

புதுக்கோட்டை அருகே களமாவூரில் முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் மூர்த்தி சற்றுமுன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

  கடந்த ஆண்டு கொடுக்கல்-வாங்கல் தகராறில் தந்தை, மகன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான மூர்த்தி, சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த நிலையில் அவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

  திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் களமாவூர் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த மூர்த்தியை, 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் சரமாரியாக வெட்டினர்.

பலத்த காயமடைந்த மூர்த்தி அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...