சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி..!

 சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி..!

சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாகுபலி, கே.ஜி.எஃப், பதான் என இந்திய சினிமாவில் மற்ற திரையுலகினர் பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்டு அந்தப் படங்கள் தமிழ்நாட்டிலும் சக்கப்போடு போட்ட நிலையில், தமிழ்சினிமா என்ன தான் பா பண்ணிட்டு இருக்கிங்க என்ற குரல் பெரிதாக எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலாக இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 10 மொழிகளில் திரைக்கு வரவிருக்கும் “கங்குவா” திரைப்படம் இருக்கும் என்ற பெரிய நம்பிக்கையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பீரியட் திரைப்படமாக உருவாகியுள்ள ’கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது. இது சூர்யாவின் 42வது திரைப்படமாகும்.

அடுத்தடுத்த படங்களாக 43வது படமாக சுதா கொங்கரா உடனும், 44வது படமாக கார்த்திக் சுப்புராஜ் உடன் கைக்கோர்ப்பு என கமிட்டாகியிருக்கும் நடிகர் சூர்யாவின் 45வது படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45வது படம் குறித்து வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சூர்யா நடிக்கும் 45வது படமானது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளதாகவும், படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...