டி20: இலங்கையை எளிதாக வென்ற இந்திய அணி…….
குவாஹாட்டியில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் ஆட்டம் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 142/9 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகுர் 3-23 விக்கெட்டுகளையும், சைனி 2-18, குல்தீப் 2-38, பும்ரா, சுந்தர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. இந்தியத் தரப்பில் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 6 பவுண்டரியுடன் 45 ரன்களையும், ஷிகர் தவன் 32 ரன்களும் எடுத்தார்கள். ஷ்ரேயஸ் ஐயர் 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 34 ரன்களும் கேப்டன் விராட் கோலி 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 17 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்கள். இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. கடைசி டி20 ஆட்டம் வெள்ளியன்று புணேவில் நடைபெறுகிற