ஜானி மாஸ்டருக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருது ரத்து..!

 ஜானி மாஸ்டருக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருது ரத்து..!

ஜானி மாஸ்டருக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெயிலர், திருச்சிற்றம்பலம், டாக்டர் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிப்புரிந்துள்ளார் ஜானி மாஸ்டர். இவர் தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஜானி மாஸ்டருக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் ‘மேகம் கருக்காதா’ பாடலின் நடனத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதை சக நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணனுடன் இணைந்து வாங்கவிருந்தார்.

இந்நிலையில் ஜானி மாஸ்டருக்கு வழங்கப்பட இருந்த விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த, நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை கடந்த ஆகஸ்டில் வெளியானது. நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரின் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் இந்திய திரையுலகத்தை உலுக்கியது. இதனைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் மீது பலக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அந்த வகையில் ஜானி மாஸ்டர் மீது பாலியர் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.

16 வயதில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பின்னர் அது பலமுறை தொடர்ந்தது என்றும் இவரது முன்னாள் உதவி நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது கடந்த மாதம் புகாரளித்தார். இதனையடுத்து ஜானி மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த பாலியல் புகாருக்கு முன்பே தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேசிய விருதை பெற ஜானி மாஸ்டருக்கு ரங்காரெட்டி நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமின் வழங்கியது. இதனையடுத்து இவருக்கு தேசிய விருது வழங்குவது குறித்தும், ஜாமின் வழங்கியது குறித்தும் சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் இவருக்கு வழங்கவிருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...