ரிலையன்ஸின் புதிய நிறுவனம்? – சலுகைகள் என்னென்ன?

 ரிலையன்ஸின் புதிய நிறுவனம்? – சலுகைகள் என்னென்ன?
அமேசானை வீழ்த்துமா ரிலையன்ஸின் புதிய நிறுவனம்? – சலுகைகள் என்னென்ன?

ஜியோ மூலமாக இந்திய தொலைத்தொடர்பு துறையின் ஒட்டுமொத்த போக்கையே புரட்டிப்போட்ட ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்ததாக இணையதள வர்த்தகத்தில் களமிறங்கியுள்ளது.ஜியோமார்ட் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய நிறுவனத்தின் மூலம் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் மிகப் பெரிய பணக்காரராக விளங்கும் ஜெஃப் பெசோசின் அமேசான் நிறுவனத்துக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.ஜியோமார்ட் நிறுவனம் எப்படி செயல்படும், அதிரடி சலுகைகள் ஏதும் அறிவிக்கப்பட்டுள்ளதா, ஜியோமார்ட்டுக்கும் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன, ஜியோமார்ட் அமேசானை தோற்கடிப்பது சாத்தியமா, உள்ளிட்ட பல்வேறு கோணங்களை அலசுகிறது இந்த கட்டுரை.
இந்தியாவின் மிகப் பெரிய பல்தொழில் குழுமமான ரிலையன்ஸ், ஜியோவுக்கு அடுத்து விடுக்கும் மிகப் பெரிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது ஜியோமார்ட். இணையதள வர்த்தகத்தில் உலகளவில் மிகப் பெரிய நிறுவனமாக விளங்கும் அமேசான் மற்றும் வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் ஆகியவை இந்தியாவின் இணையதள வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜியோமார்ட்டில் இப்போதைக்கு கிட்டத்தட்ட 50,000 விதமான மளிகை சாமான்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு நவி மும்பை, தானே, கல்யாண் ஆகிய பகுதிகளில் சோதனை ரீதியில் தொடங்கியுள்ள ஜியோமார்ட்டின் சேவை விரைவில் நாடுமுழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது. 

கடந்த 2016ஆம் ஆண்டு ரிலையன்ஸின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தொடங்கப்பட்டபோது, ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டதால், இந்திய தொலைத்தொடர்பு துறையே ஆட்டம் கண்டதுடன், போட்டியை சமாளிப்பதற்காக மற்ற நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டன.
அந்த வகையில், தொடங்கப்பட்ட நான்கே ஆண்டுகளில் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ள ஜியோவின் 322 மில்லியன் வாடிக்கையாளர்களை
மையாக கொண்டே இந்த ஜியோமார்ட் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜியோமார்ட் நிறுவனத்தில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...