சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 30ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம்.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே காணப்படுமென கூறப்பட்டுள்ளது. வருகிற 30ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல ஊர்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.