’கோடீஸ்வரி’ மூலம் ராதிகா படைத்த மற்றொரு சாதனை

 ’கோடீஸ்வரி’ மூலம் ராதிகா படைத்த மற்றொரு சாதனை
பெண்களுக்கான ஷோ மட்டுமில்ல : ’கோடீஸ்வரி’ மூலம் ராதிகா படைத்த மற்றொரு சாதனை
சின்னத்திரை உலகில் எத்தனையோ ’கேம் ஷோ’-க்கள் உள்ளன. அந்த வகையில் பெண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளக் கூடிய புத்தம் புதிய கேம் ஷோ-வான கோடீஸ்வரி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கி வருகிறார். ராதிகாவின் கணவரும், நடிகருமான சரத்குமார் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.

சரி கோடீஸ்வரிக்கு வருவோம். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய, ‘கோன் பனேகா குரோர்பதி (KBC)’ இந்திய தொலைக்காட்சி ரசிகர்களை டிவி முன்பு அமர வைத்தது. இதைத்தொடர்ந்து 
பல இந்திய மொழிகளில் பல முன்னணி பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளனர். ஆனால் ஆசியாவிலேயே முதன்முறையாக இந்நிகழ்ச்சியை ஒரு பெண் தொகுப்பாளர் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை. ஏற்கனவே பல்வேறு சீரியல்களின் மூலம் பெண்களின் மனதில் இன்னும் ஆழமாக இடம் பிடித்து விட்ட ராதிகா கோடீஸ்வரி தொகுப்பாளினியாக ‘குட் சாய்ஸ்’. 

”வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடிப்பு, டைரக்ஷன், தயாரிப்பாளர், கிரியேட்டிவ் ஹெட் என 40 ஆண்டுகளாக பல வேலைகளைச் செய்துள்ளேன். ஆனால் ஒரு டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக முதன்முறை 
‘கோடீஸ்வரி’ மூலம் தான் அடியெடுத்து வைக்கிறேன். பல வேலைகளுக்கு நடுவில்தான் இந்த வாய்ப்பு வந்தது. இருந்தாலும் பெண்களுக்கான முதல் கோடீஸ்வரி என்பதாலும், பெண்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும் ஒரு களமாகவும் இந்நிகழ்ச்சி இருக்கப்போகிறது என்பதை அறிந்து தொகுப்பாளர் வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்” என்று மகிழ்ச்சியாகிறார் ராதிகா.பொதுவாக பெண்களுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் பெரும்பாலும் இருக்காது.

பெற்றோர், கணவர், குழந்தைகள் என அவர்களது முழு உலகமும் அவர்களைச் சுற்றி தான் இருக்கும். ஆயிரக் கணக்கான பெண்களின் விண்ணப்பங்களை ஆடிஷன் செய்து அதில் சுவாரஸ்யமான 
பங்கேற்பாளர்களை களம் இறக்கி வருகிறது கோடீஸ்வரியை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் சேனல்.நேற்றைய நிகழ்ச்சியில் நரிக்குறவர் சமூகத்தில் பிறந்த முதல் பி.இ பட்டதாரியான ஸ்வேதா கலந்துக் கொண்டார். தங்கள் சமூகத்தைப் பற்றிய சுவாரஸ்யமான பல விஷயங்களை ராதிகாவிடமும், பார்வையாளர்களிடமும் அவர் பகிர்ந்துக் கொண்டார்.

முக்கியமாக அவர்களின் சமூகத்தில் ஆண்கள் தான் பெண்களுக்கு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்துக் கொள்வார்கள் என்று கூறியது, மற்ற பெண்களிடையே பொறாமையை ஏற்படுத்தியது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...