ஒருங்கிணைந்த ரயில் மேலாண்மை சேவை -பிரதமருக்கு எதிர்ப்புக் கடிதம்.
ஒருங்கிணைந்த ரயில் மேலாண்மை சேவை : அதிகாரிகள் பிரதமருக்கு எதிர்ப்புக் கடிதம்.
மூன்று தொழில்நுட்ப சாராத ரயில்வே துறை (Non- technical ) மற்றும் ஐந்து தொழில்நுட்ப ரயில் சேவைகளையும் இணைத்து ஒரே இந்திய ரயில்வே மேலாண்மை சேவையாக (ஐஆர்எம்எஸ்) மத்திய அரசு அறிவிப்புக்கு நான் டெக்னிக்கல் ரயில்வே அதிகாரிகளிடையே மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது.அவர்கள் தற்போது பிரதமர்,அமைச்சரவை செயலாளர், ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரியம் தலைவர் மற்றும் பணியாளர் பயிற்சித் துறை அமைச்சர் போன்றோர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே துறை வாரியத்தின் (chairman of railway board) தலைவர் வியாழக்கிழமை மாலை, அறிவிக்கப்பட்ட இந்த இணைப்பு தொடர்பாக மூன்று மணி
நேர வீடியோ கான்பரன்ஸ் நடத்தியுள்ளார். இருந்தாலும், ரயில்வே போக்குவரத்து, ரயில்வே பணியாளர்கள் மற்றும் ரயில்வே கணக்கு சேவைகளில் இருந்து வரும் அதிகாரிகளின் அச்சங்களை ரயில்வே வாரியத் தலைவர் நீக்க தவறியதோடு, மேலும் சில மனக் கசப்புகளை பதியவைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.