முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 76.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு என தகவல்.
டெல்லியில் கடும் குளிரால் மக்கள் அவதி: வெப்பநிலை, 2.4 டிகிரி செல்சியசாக பதிவு.
வருகிற 16-ம் தேதி பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படவில்லை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். பிரதமர் உரையை மாணவர்கள் வாட்சப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கேட்டால் போதும் – செங்கோட்டையன்.
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை ஒன்றியம் 21வது வார்டில் உள்ள 9 வாக்குபதிவு மையங்களுக்கும் வரும் 30 தேதி மறு வாக்குபதிவு நடைபெறும் என அறிவிப்பு – மாவட்ட தேர்தல் அலுவலர்.
நாடு முழுவதும், ஒரே மாதிரியான ரேஷன் கார்டு திட்டம், 12 மாநிலங்களில் ஜனவரி 15ம் தேதி அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிக்கு இந்தியா சார்பில் விளையாட தகுதி பெற்றார் மேரி கோம். 51 கிலோ எடைப் பிரிவில், 23 வயதான நிஹாத் ஸரினை தோற்கடித்தார் 36 வயதான மேரி கோம்.
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு.
24,05,145 பேர் எழுதிய CTET தேர்வில் 5,42,285 பேர் மட்டுமே தேர்ச்சி. 22.55% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக CBSE அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தேர்வு நடைபெற்ற 19 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற காவலர்களுக்கு ஊதியம் தர ரூ.1.38 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு.