பீர்க்கங்காய் கடைசல்
தேவையானவை :
பீர்க்கங்காய் – 1 கப்,
பெரிய தக்காளி – 1,
பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 1 கப்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்,
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா 1/4 கப்.
தாளிக்க :
கடுகு – 1 டீஸ்பூன்,
மோர் மிளகாய் வற்றல் – 3,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – மிளகு அளவு,
நெய் – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை :
1. துவரம் பருப்பு, பாசிப் பருப்பை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீர் விட்டு குழைய வேகவிட்டுக் கொள்ளவும்.
2. பிறகு இந்த கலவையை மத்தால் நன்கு கடைந்து கொள்ளவும். இந்த பருப்பு கடைசலை தனியாக வைக்கவும்.
3. தாளிக்க வேண்டியதை எண்ணெயில் தாளித்து பருப்பில் கொட்டவும். கடாயில் எண்ணெய் சிறிது விட்டு வெங்காயம், அரிந்த தக்காளி மற்றும், பீர்க்கங்காயை வதக்கி தாளித்து கொட்டிய பருப்பு கடைசலை விட்டு, சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கவும்.