இன்றைய ராசிபலன்கள் – 21.12.2019 – சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் வகுத்து அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். நண்பர்களின் மூலம் நல்லதொரு சகாயம் உண்டாகும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : முயற்சிகள் ஈடேறும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.
——————————————————————-
ரிஷபம் :
சாதகமான சூழலால் விவாதங்களில் வெற்றி கிடைக்கும். பயணங்களால் இலாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
ரோகிணி : நட்பு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : உறவு மேம்படும்.
——————————————————————-
மிதுனம் :
சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். ஞான உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய கலைகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிருகசீரிஷம் : குழப்பங்கள் நீங்கும்.
திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
——————————————————————-
கடகம் :
எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும். தீர்ப்புகளில் சாதகமான சூழல் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : வெற்றி கிடைக்கும்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.
——————————————————————-
சிம்மம் :
புதிய அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். செவித்திறனில் ஏற்பட்டுள்ள உபாதைகள் குறையும். குறுகிய தூர பயணத்தால் மாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளின் மூலம் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மகம் : சாதகமான நாள்.
பூரம் : உபாதைகள் குறையும்
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
——————————————————————-
கன்னி :
ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க முயல்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து இலாபம் அடைவீர்கள். தந்தையிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கடன்களை அடைக்க முயல்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : சேமிப்பு உயரும்.
அஸ்தம் : இலாபம் உண்டாகும்.
சித்திரை : கடன்கள் தீரும்.
——————————————————————-
துலாம் :
செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். புதிய வாகனச்சேர்க்கை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : மேன்மை உண்டாகும்.
சுவாதி : குழப்பங்கள் ஏற்படும்.
விசாகம் : புகழ் உண்டாகும்.
——————————————————————-
விருச்சிகம் :
அந்நியர்களிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும். பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அமைதியுடனும், அனுகூலமாகவும் நடந்து கொள்ளவும். அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : எச்சரிக்கை வேண்டும்.
அனுஷம் : பொருள் தேக்கநிலை உண்டாகும்.
கேட்டை : சாதகமான நாள்.
தனுசு :
நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சர்வதேச தொழில் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
மகரம் :
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிவோருக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும். 
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
திருவோணம் : இலாபம் அதிகரிக்கும்.
அவிட்டம் : சிக்கல்கள் நீங்கும்.
——————————————————————-
கும்பம் :
புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுக்கிடையேயான மனக்கசப்புகள் குறையும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : மனக்கசப்புகள் குறையும்.
பூரட்டாதி : உயர்வு உண்டாகும்.
——————————————————————-
மீனம் :
புனித யாத்திரை செல்வதற்காக திட்டமிடுவீர்கள். செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். அந்நியர்களிடம் பேசும்போது கவனமாக பேசவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடைகளின் சேர்க்கை உண்டாகும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : பயணம் மேற்கொள்வீர்கள்.
உத்திரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.
ரேவதி : ஆடைச்சேர்க்கை உண்டாகும்.
——————————————————————-
                – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...