அனுமனுக்கு வெண்ணெய், வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றுவது ஏன்?
பக்திக்கு எடுத்துக் காட்டாக திகழும் அனுமனுக்கு ஏன் வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றப்படுகிறது, வெண்ணெய் ஏன் பூசப்படுகிறது என்பதைப் பார்ப்போம்…
அனுமன் தன் பக்தியால் அந்த பரந்தாமனைப் பல முறை திகைப்பில் ஆழ்த்தச் செய்துள்ளார். இப்படியும் ஒருவன் பக்தி செலுத்த முடியுமா என் பல முறை அனுமனைப் பார்த்து ராம பிரான் வியந்துள்ளார். அவருக்கு வெற்றிலை மாலை, செந்தூரம் பூசுதல், வெண்ணெய், வடை மாலை சாற்றி வழிபடுதல் என பல முறைகளில் வழிபட்டு வருகின்றோம்.
அப்படிப்பட்ட அனுமனுக்கு உடலில் வெண்ணெய் பூசுவதும், உளுந்து வடை சாற்றி வழிபடுவதும் வழக்கமாக உள்ளது.
அனுமனுக்கு வெண்ணெய் பூசுவதற்கு முக்கிய காரணம் சீதா தேவி தான். இலங்கைக்கு தீ வைத்து அட்டகாசம் செய்த அனுமனை நெருப்பு சுடவே இல்லை. ஆனாலும் அதன் வெம்மை தாக்கியது. அதே போல் அவர் போர்களத்தில் சண்டை புரிந்ததோடு, ராமன் மற்றும் லட்சுமணன் ஆகியோரை தன் தோள்களில் அமரச் செய்து போர் செய்ய உறுதுணையாக இருந்தார்.
அப்போது அனுமன் பிரமாண்ட தோற்றத்தில் இருக்க அவர் மீது பல அஸ்திரங்கள், கொடிய ஆயுதங்களால் எதிரிகள் தாக்கினர். அதனால் அனுமனின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. ஆனால் ராமனுக்காக இந்த காயங்கள் எல்லாம் வரமாகத் தான் பார்த்தார்.