ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு..!

 ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு..!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 அடியாக அதிகரித்துள்ளது.

நேற்று மாலை 3000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 5000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக கோடை வெப்பத்தால் நீர்வரத்து குறைந்து ஆங்காங்கு சிறு சிறு தண்ணீர் தேங்கி குட்டைகளாக காட்சியளித்த ஒகேனக்கலில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...