வரலாற்றில் இன்று (08.07.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சூலை 8 (July 8) கிரிகோரியன் ஆண்டின் 189 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 190 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 176 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1099 – முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர்.
1497 – வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் ஐரோப்பிய நேரடிப் பயணம் ஆரம்பித்தது.
1579 – உருசிய மரபுவழித் திருச்சபையின் புனித திருவோவியம் அன்னை கசான் தத்தாரிஸ்தான், கசான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.
1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் றோட் தீவுக்கான அரசு உரிமையை போதகர் ஜான் கிளார்க்கிற்கு வழங்கினார்.
1709 – உருசியப் பேரரசர் முதலாம் பியோத்தர் போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு மன்னனைத் தோற்கடித்தார்.
1730 – சிலியின் கரையோரப் பகுதியை 8.7 அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1760 – புதிய பிரான்சில் இடம்பெற்ற கடற் சமரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
1776 – அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் முதலாவது பொது வாசிப்பை யோன் நிக்சன் படித்து முடித்தபோது, நாடெங்கும் தேவாலய மணிகள் (விடுதலை மணி உட்பட) ஒலித்தன.
1827 – இலங்கையில் இந்திய வம்சாவழித் தமிழர் நீதிமன்றங்களில் சான்றாயர்களாக அமர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.[1]
1859 – சுவீடன்-நோர்வே மன்னராக பதினைந்தாம் சார்லசு முடி சூடினார்.
1876 – தென் கரொலைனாவில் வெள்ளையின ஆதிக்கவாதிகள் ஐந்து கறுப்பினத்தவரைக் கொன்றனர்..
1879 – அமெரிக்காவின் ஜென்னெட் என்ற கப்பல் தனது கடைசி ஆய்வுப் பயணத்தை வட துருவம் நோக்கி ஆரம்பித்தது. இது 1881 இல் மூழ்கியது.
1892 – நியூபவுண்லாந்தின் சென் ஜோன்சு நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
1932 – டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு பெரும் பொருளியல் வீழ்ச்சியின் மிகத் தாழ்ந்த புள்ளிகளை (41.22) எட்டியது.
1937 – துருக்கி, ஈரான், ஈராக், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் தெகுரானில் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. இவ்வுடன்பாடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிலைத்திருந்தது.
1947 – அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் ஒன்று நியூ மெக்சிகோவில் வீழ்ந்ததாக செய்தி அறிவிக்கப்பட்டது.
1962 – ரங்கூனில் மாணவர் கிளர்ச்சியை அடக்க இராணுவத் தளபதி நே வின் ரங்கூன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கட்டடத்தைத் தகர்த்தார்.
1966 – புருண்டியின் மன்னர் நான்காம் முவாம்புத்சா அவரது மகன் இளவரசர் சார்லசு இந்தீசியினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1972 – பாலத்தீன எழுத்தாளர் கசன் கனஃபானி இசுரேலிய மொசாட் படைகளினால் படுகொலை செய்யப்பட்டார்.
1982 – ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
1985 – திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1988 – பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்குச் சென்று கொண்டிருந்த ஐலண்டு விரைவுவண்டி பெருமண் பாலத்தில் தடம் புரண்டு அஷ்டமுடி ஏரியில் வீழ்ந்ததில் 105 பயணிகள் உயிரிழந்தனர், 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1990 – செருமனி அர்கெந்தீனாவை வென்று காற்பந்து உலகக்கோப்பையை வென்றது.
1994 – கிம்-இல்-சுங் இறந்ததை அடுத்து, அவரது மகன் கிம் ஜொங்-இல் வட கொரியாவின் உயர் தலைவராகப் பொறுப்பேற்றார்.
2003 – சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் உயிரிழந்தனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது.[2]
2006 – ம. பொ. சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன்.
2011 – அட்லாண்டிசு விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.
2014 – பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேல் காசா மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.

பிறப்புகள்

1831 – ஜான் ஸ்டைத் பெம்பர்டென், கொக்கக் கோலாவைக் கண்டுபிடித்த அமெரிக்க வேதியியலாளர் (இ. 1888)
1839 – ஜான் டி. ராக்பெல்லர், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1937)
1863 – சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா, நேபாள இராச்சியத்தின் தலைமை அமைச்சர் (இ. 1929)
1906 – பிலிப் ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (இ. 2005)
1914 – ஜோதி பாசு, மேற்கு வங்கத்தின் 6வது முதலமைச்சர் (இ. 2010)
1949 – எ. சா. ராஜசேகர், ஆந்திராவின் 14வது முதலமைச்சர் (இ. 2009)
1966 – ரேவதி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1969 – சுகன்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1972 – சௌரவ் கங்குலி, இந்தியத் துடுப்பாளர்
1977 – மிலோ வேண்டிமிக்லியா, அமெரிக்க நடிகர்
1980 – ரூபிள் நாகி, இந்திய ஓவியர்
1998 – ஜேடன் சிமித், அமெரிக்க நடிகர்

இறப்புகள்

1623 – பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1554)
1695 – கிறித்தியான் ஐகன்சு, டச்சு இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1629)
1822 – பெர்சி பைச்சு செல்லி, ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1792)
1928 – கிரிஸ்டல் கேத்தரின் ஈஸ்ட்மன், அமெரிக்க சட்ட அறிஞர், பெண்ணியலாளர், சமூகச் செயற்பாட்டாளர் (பி. 1881)
1939 – ஹேவ்லாக் எல்லிஸ், ஆங்கிலேய உளவியலாளர் (பி. 1859)
1971 – ஏ. என். கிருஷ்ணராவ், கன்னட எழுத்தாளர், இலக்கியவாதி (பி. 1908)
1979 – ராபர்ட் பர்ன்ஸ் உட்வர்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1917)
1980 – மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழறிஞர் (பி. 1900)
1989 – வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (பி. 1924)
2006 – ராஜா ராவ், இந்திய எழுத்தாளர் (பி. 1908)
2007 – சந்திரசேகர், இந்தியாவின் 9வது பிரதமர் (பி. 1927)
2011 – கா. கலியபெருமாள், மலேசிய எழுத்தாளர் (பி. 1937)
2012 – ஏ. எஸ். ராகவன், தமிழக எழுத்தாளர் (பி. 1928)
2013 – சுந்தரி உத்தம்சந்தனி, இந்திய சிந்தி எழுத்தாளர் (பி. 1924)
2013 – ராசு மதுரவன், தமிழ்கத் திரைப்பட இயக்குநர்
2014 – நீலமேகம் பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்
2016 – புர்கான் முசாபர் வானி, காசுமீரி விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1994)
2016 – அப்துல் சத்தார் எதி, பாக்கித்தானியக் கொடையாளர் (பி. 1928)

சிறப்பு நாள்

******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!