விரைவில் திரைப்படமாகும் ‘யுவராஜ் சிங்’ வாழ்க்கை வரலாறு..! 

 விரைவில் திரைப்படமாகும் ‘யுவராஜ் சிங்’ வாழ்க்கை வரலாறு..! 

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அவரது தந்தை யோகராஜ் சிங் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வாழ்க்கை வரலாற்று படத்திற்கு பிறகு,  சிக்சர் மன்னன் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும்,  யுவராஜ் சிங் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டு விட்டதாகவும் அவரது தந்தை யோகராஜ் சிங் அறிவித்துள்ளார்.  யோகராஜ் சிங் ‘பாக் மில்கா பாக்’ படத்தில் பணிபுரிந்தபோது மிகப்பெரிய புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பணிபுரிவதாக அவரது தந்தை யோகராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்:

“எனது மகனின் பயோபிக் படத்திற்கு ‘தி மேன் ஆஃப் தி லாங்கஸ்ட் ஹவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்தப் படத்தில் யுவராஜுக்கும் அவரது தந்தையான எனக்கும் இடையிலான உறவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.  இதில் இருவருக்குமான உறவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.  படத்தின் தலைப்பை யுவராஜ் சிங் முடிவு செய்துள்ளதாகவும், இப்போது இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்த போது யுவராஜ் சிங்கின் புகழ் உச்சத்தை தொட்டது.  இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்துகளில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை அடித்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் யுவராஜ் சிங்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...