தந்தையர் தின வாழ்த்துகள்

 தந்தையர் தின வாழ்த்துகள்

வயதாகி போவதின்
தடங்களை பிரதிபலிக்கிறது
அப்பாவின் செய்கைகள். கம்பீர நடை தளர்ந்து நிமிர்ந்த முதுகு
கூன் போட்டு, மூக்கு கண்ணாடி அணிந்து, அவரிடம் பேச ஹைடெசிபலில்
கத்தினாலும், பழைய நினைவு நாட்களை
அசை போட்டாலும்

இத்தனைக்கு பிறகும்
பேரன்களின் பள்ளிக் கூடத்திற்கு தான் சேர்த்து வைத்த
ஓய்வூதிய அன்பினை மட்டும் ஊட்டி நடத்தி போகிறார்!!❤️❤️❤️

சருகாகும் வரை
பூத்துக் கொண்டே இருக்கும்
அப்பா மரங்கள்….

💐💐சுபா மோகன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...