முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 101-வது பிறந்த நாள்..!

 முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 101-வது பிறந்த நாள்..!

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாளான இன்று மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத தலைவர் என்றால் அது கருணாநிதி… திமுக தலைவராக சுமார் அரை நூற்றாண்டு இருந்த இவர், சுமார் 18 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.

இவர் தமிழக முதல்வராக இருந்த போது தான் மாநிலத்தில் பல முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாடு இந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்றால் அதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.

கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. வழக்கமாகக் கருணாநிதி பிறந்த நாளை திமுகவினர் வெகு சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஆனால், இந்த முறை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பெரியளவில் கொண்டாட்டங்கள் இருக்காது என சொல்லப்படுகிறது.

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 101-வது பிறந்த நாள் திமுக சார்பில் கொண்டாடப்படுகிறது.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் காலை 9 மணிக்குச் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்.

பின்னர் 9.15 மணி சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும், 9.30 மணிக்குச் சென்னை கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும் மற்றும் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...