சூர்யா 44 படப்பிடிப்பு துவக்கம்..!

 சூர்யா 44 படப்பிடிப்பு துவக்கம்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு இன்று அந்தமானில் ஆரம்பித்தது. அந்தமானில் உள்ள போர்ட் பிளேர் துறைமுகத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை படமாக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அந்த படத்தில் சூர்யா எந்த மாறியான தோற்றத்தில் வரப் போகிறார் என்கிற ஃபர்ஸ்ட் ஷார்ட் வீடியோவை தற்போது கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியை வைத்து பீட்சா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு முன்னதாக நாளை இயக்குநர் குறும்பட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். பீட்சா படத்தின் வெற்றிக்கு பிறகு ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி சரவெடியாக வெடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் பல விருதுகளை வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சூர்யா 44 படம் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக அந்தமான் தீவில் படப்பிடிப்பை கார்த்திக் சுப்புராஜ் இன்று தொடங்கியுள்ளார். முதல் ஷாட்டே சூர்யாவை வைத்து அவர் இயக்கி உள்ள நிலையில், அதன் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டலாக சூர்யா வந்திருப்பார். அவருக்கான க்ளோசப் காட்சிகள் ரசிகர்களை மிரட்டின. அதேபோல கங்குவா படத்தின் டீசரிலும் க்ளோஸப் காட்சியில் முகத்தைக் காட்டி சூர்யா மிரள வைப்பார். அதைப்போல தற்போது வெளியாகியுள்ள சூரிய 44 படத்தின் ஃபர்ஸ்ட் ஷார்ட் வீடியோவில் திரும்பியபடி அமர்ந்திருக்கும் சூர்யா தனது முகத்தை மிகவும் நெருக்கமாக ஜூமில் காட்டி கதிகலங்க வைக்கிறார். இதில், ரோலக்ஸ் பிரெஞ்சு பியர்ட் வைத்தது போல இருக்கிறதே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...