தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி..!

 தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி..!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக 40 கோடி ரூபாய்க்கு கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் மேலும் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய 25 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இதற்கான நிதி தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய், உதயநிதி ஆகியோரும் கட்டுமான பணிகளுக்காக தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் நடிகர் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சங்க கட்டட பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை இந்தப் பணிகளுக்காக 40 கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 25 கோடி ரூபாய்களுக்கு செலவுகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் கமல்ஹாசன், விஜய், உதயநிதி ஸ்டாலின், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட கோலிவுட்டின் நடிகர்கள் தொடர்ந்து நிதியுதவி செய்து வந்துள்ளனர். தொடர்ந்து சங்க கட்டட பணிகளுக்காக நிதியுதவி பெறப்பட்டு வருகிறது. இந்த கட்டட பணிகளுக்காக வங்கியில் 40 கோடி ரூபாய் கடன் வாங்கவுள்ளதாக முன்னதாக சங்கத்தின் பொருளாளர் கார்த்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் சங்கத்தின் கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜையில் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்றைய தினம் சங்க கட்டடப் பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக தன்னுடைய சொந்த நிதியிலிருந்து தந்துள்ளதாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். இதற்காக சங்கத்தின் சார்பில் சிவகார்த்திகேயனுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை விரைவில் கட்டி முடிக்க சங்கத்தினர் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த கட்டடத்திற்கு மறைந்த நடிகர் விஜயகாந்தின் பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து சங்கத்திற்கான நிதியுதவியை நடிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கொடுத்துவரும் சூழலில் விரைவில் சங்கக்கட்டடப் பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...