கலீல் ஜிப்ரான்

 கலீல் ஜிப்ரான்

கனவுக் கவிஞன் 😍– கலீல் ஜிப்ரான்🙏🏽

கலீல் ஜிப்ரான் 

என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்

ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931, ஒரு லெபனானியஅமெரிக்கஓவியர்கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே கலை கற்று தன்னுடைய இலக்கியப் பணியை துவங்கினார்.

🎩கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது பயிர்களைக் காப்பதற்காக ஒரு பொம்மையை உருவாக்குவார்கள். இரண்டு குச்சிகளை ஒரு சிலுவைபோல அமைத்து அதன் மீது ஒரு சட்டையைப் போடுவார்கள். தலைக்கு ஒரு மண்பானையை வைப்பார்கள்.

விலங்குகளும் பறவைகளும் அதைப் பார்த்து ஒரு மனிதன் அங்கே நிற்பதாக எண்ணி பயந்து போகும். இரவில் அந்த வெள்ளை சட்டையும் இரண்டு கைகளுமாக யாரோ காவலிருப்பதைப் போலத் தோன்றும். விலங்குகளுக்கு அது போதுமானது. அவை பண்ணைக்கு அருகில் வராது.

இந்த போலி மனித பொம்மையைப் பற்றி கலீல் ஜிப்ரான் ஒரு அழகான கதை சொல்லுவார்.

கலீல் ஜிப்ரான் கூறுகிறார் ” ஒருநாள் நான் ஒரு சோளக் கொல்லைப் பொம்மையைப் பார்த்து, ‘உன்னைச் செய்த விவசாயிக்கு நீ தேவை. உன்னைக் கண்டு, அதிக அறிவில்லாத விலங்குகள் உண்மை என்று நம்பி விடுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.ஆனால் மழையிலும்,வெயிலிலும்,கொட்டும் பனியிலும்,நடுங்கும் குளிரிலும், நீ ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டேன்.

அதற்கு அந்த போலி மனித பொம்மை “உனக்கு என் மகிழ்ச்சி தெரியாது. மழை, வெயில்,பனி,குளிர் இவற்றில் துன்பப்பட்டாலும், அந்த விலங்குகளைப் பயமுறுத்துவதில் இன்பம் இருக்கிறது. எண்ணைக் கண்டு ஆயிரக்கணக்கான விலங்குகள் அஞ்சுகின்றன. நான் போலி என்றும் எனக்குள் ஒன்றும் இல்லை என்றும் எனக்குத் தெரியும். ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனது இன்பம் பிறரை பயமுறுத்துவதில் இருக்கிறது.” என்று கூறியது என்றார்.✅

✳ஆக – நிறைய சோளக் காட்டு பொம்பைகள் நாட்டில் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றன!!🙏🏽

🙏🏽இவர் கவிஞர் மற்றும் சிறந்த ஓவியராகத் திகழ்ந்தார்👆🏾. அதுமட்டுமன்றி இவர் எல்லோராலும் தீர்கதரிசியாக உணரப்பட்டா👀ர். இவருடைய பெரும்பாலான ஓவியங்களில் , நிர்வாணமான பெண்கள் நடனமாடிக் கொண்டிருப்பார்கள். இவர் தனது உள்மனதை அகழ்வாராய்ச்சி செய்து எழுதும் கவிதைகள் ஜென் சிந்தனைகள் வெளிப்படும்.🎩

சில கவிதைகள்/தத்துவங்கள்.✅

💥Only once have I been made mute. It was when a man asked me, “Who are you?”

ஒரே ஒரு முறை நான் ஊமையாக நின்றேன் ” நீ யார் ? என்று ஒருவன் என்னைக் கேட்ட போது ..

💥The most pitiful among men is he who turns his dreams into silver and gold.

தன் கனவுகளைப் பொன்னாகவும் வெள்ளியாகவும் மாற்றிப் பார்ப்பவன் மிகவும் பரிதாபத்துக்குரியவன்.

💥A woman may veil her face with a smile.

பெண் , புன்னகை என்னும் முகமூடியால் தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள்.

]

💥Trees are poems that the earth writes upon the sky. We fell them down and turn them into paper that we may record our emptiness.பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள் , ஆனால் அவற்றை நாம் வெட்டிச் சாய்த்து காகிதமாக்கி , நம் வெறுமையை அதில் எழுதித் தீர்க்கிறோம்.

💥Poetry is not an opinion expressed. It is a song that rises from a bleeding wound or a smiling mouth.

கவிதை என்பது கருத்தல்ல , அது குருதி வழியும் காயத்திலிருந்தோ புன்னகை புரியும் உதடுகளிலிருந்தோ உதயமாகிறது .

]

💥A thousand years ago my neighbor said to me, “I hate life, for it is naught but a thing of pain.” And yesterday I passed by a cemetery and saw life dancing upon his grave.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என் அண்டைவீட்டுக்காரன் என்னிடம் சொன்னான் .. ” நான் இந்த வாழ்க்கையை வெறுக்கிறேன்….இது வலி மிகுந்தது ” நேற்று மயானம் வழியே சென்ற பொழுது கவனித்தேன்.. அந்த அண்டைவீட்டுக்காரனின் சமாதி மீது வாழ்க்கை நடனமாடிக்கொண்டிருந்தது.

💥If your heart is a volcano how shall you expect flowers to bloom in your hands? உன் உள்ளம் எரிமலையாகப் பொங்கினால் உன் உள்ளங்கையில் எப்படி மலர்கள் பூக்கும் ?

💥Many a woman borrows a man’s heart; very few could possess it.

அநேக பெண்கள் ஆணின் இதயத்தை இரவலாகப் பெறுகிறார்கள் ஆனால் ஒரு சிலரே அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.

💥Lovers embrace that which is between them rather than each other.

காதலர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் பொழுது தங்களுக்கு இடைப்பட்ட காதலைத் தான் தழுவிக்கொள்கிறார்கள்.. தங்களை அல்ல…..

💥Even the hands that make crowns of thorns are better than idle hands.

சோம்பியிருக்கும் கரங்களை விட முட்கிரீடங்கள் செய்யும் கரங்கள் எவ்வளவோ மேல்.

💥அவளுடைய

அழகிய மென்மையான

கைவிரல்களால் கோதப்படும்

என் தலைமுடிக்கு,

சூட்டப்படும் வேறெந்த மகுடத்தையும்

நான் ஏற்கத் தயாராயில்லை.

💥வெள்ளைக் காகிதம்

ஒன்று பனிக்கட்டி போலப்

பிரகாசமாய், பரிசுத்தமாய்

இருந்தது.

💥அது சொன்னது,

“நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..

இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..

இருள் என் அருகில் வர

இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்..

சுத்தமில்லாத எதுவும்

என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!”

💥கறுப்பு மைபுட்டி ஒன்று

காகிதம் சொன்னதைக் கேட்டது..

தனக்குள் சிரித்துக் கொண்டது..

ஆனாலும் காகிதத்தை நெருங்க

அதற்குத் தைரியம் வரவில்லை..!

💥பல வண்ண வண்ண பென்சில்களும் கூட

வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன..

ஆனால் அவையும்

அதை நெருங்கத் துணியவில்லை..!

💥இன்று வரை

வெள்ளைக் காகிதம்

தான் விரும்பியபடி

பரிசுத்தமானதாகவே இருக்கிறது..

ஆனால்,

வெறுமையாக இருக்கிறது..!!

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...