ஒரே நாளில் 4 படங்களின் பூஜையை அறிவித்த தயாரிப்பாளர்..!

 ஒரே நாளில் 4 படங்களின் பூஜையை அறிவித்த தயாரிப்பாளர்..!

நடிகர் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியான படம் இன்று நேற்று நாளை. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய ஹீட்டை கொடுத்தது. டைம் மிஷினை மையமாக வைத்து இந்த படத்தின் கதைகளம் உருவாக்கப்பட்டிருந்தது. தன்னுடைய சிறப்பான திரைக்கதையால் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருந்தார் ரவிக்குமார். அவருக்கு இந்த முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் அயலான் படத்தை அவர் இயக்கியிருந்தார்.

கடந்த ஜனவரியில் பொங்கலையொட்டி அயலான் படம் வெளியானது. இந்தப் படத்தில் ஏலியன் கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த சூழலில் அடுத்தடுத்த சயின்ஸ் பிக்சன் படங்கள் மூலம் ரவிக்குமார் ரசிகர்களின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். இந்நிலையில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது. திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் பொன்ராம். படத்திற்கான இசையமைப்பாளராக ஜிப்ரான் இணைந்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது இன்று நேற்று நாளை படம். இந்தப் படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ஏராளமான ரசிகர்களை தன்னுடைய திரைக்கதையால் கட்டி போட்டது. 50 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்படும் டைம் மெஷினை, அதன் சயின்டிஸ்ட் 2015ம் ஆண்டிற்கு அனுப்பி வைக்க, அது விஷ்ணு விஷால் மற்றும் கருணாகரன் கைகளில் கிடைக்கிறது.

அதை ஆபரேட் செய்யும் விஷயத்தை தற்போதைய ஒரு சயின்டிஸ்ட் மூலமாக அறிந்து கொள்ளும் விஷ்ணு விஷால் மற்றும் கருணாகரன் அதை வைத்து தங்களது வாழ்க்கையை சிறப்பாக்கி கொள்கின்றனர். இந்த டைம் மெஷினால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பும் அதிலிருந்து அவர்கள் தப்பிப்பதாகவும் இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாக இருந்த போதிலும் இந்த படத்தின் இயல்பான கதைக்களம் மற்றும் காட்சியமைப்புகள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக நீண்ட காலங்களாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது இன்று நேற்று நாளை 2 படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கார்த்திக் பொன்ராம் படத்தை இயக்கவுள்ள சூழலில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

தற்போது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்துவரும் சூழலில் இந்தப் படத்தின் பூஜை நடைபெற்ற புகைப்படங்க்ளை சிவி குமார் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புதிய அலுவலகம், புதிய துவக்கம், புதிய படங்கள் என்று அவர் மகிழ்ச்சியுடன் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இன்று நேற்று நாளை 2 படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க கமிட்டாக சூழலில் அவருக்கு பதிலாக யார் நடிப்பார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதனிடையே பீட்சா 4 படத்திற்கான பூஜையும் இன்றைய தினம் போடப்பட்டு அதன் வேலைகளும் துவங்கியுள்ளதாக தயாரிப்பு தரப்பு அப்டேட் தெரிவித்துள்ளது. படத்தின் மூன்று பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நான்காவது பாகம் உருவாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த படங்களின் ஷூட்டிங் விரைவில் துவங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் அபி ஹாசன் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அபி ஹாசனின் அப்பா நடிகர் நாசர் மற்றும் அம்மாவும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...