வரலாற்றில் இன்று ( 04.04.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
வரலாற்றில் இன்று | Today History in Tamil
ஏப்ரல் 4 கிரிகோரியன் ஆண்டின் 94 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 95 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 271 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1147 – மாஸ்கோ குறித்த முதலாவது வரலாற்றுப் பதிவு.
1460 – பேசெல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1581 – உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
1660 – ஆங்கிலேய உள்நாட்டுப் போரில் குற்றம் இழைத்தவர்களுக்குப் பகிரங்க மன்னிப்பு வழங்கும் அறிவிப்பை இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வெளியிட்டார்.
1721 – ராபர்ட் வால்போல் ஐக்கிய இராச்சியத்தின் 1-வது பிரதமராகப் பதவியேற்றார்.
1812 – அமெரிக்கத் தலைவர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியத்திற்கு எதிரான 90-நாள் வணிகத் தடையை சட்டமாக்கினார்.
1814 – முதலாம் நெப்போலியன் முதற்தடவையாக முடி துறந்து தனது மகன் இரண்டாம் நெப்போலியனை பிரான்சின் மன்னனாக அறிவித்தார்.
1818 – 13 சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களைக் கோடுகளுடனும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நட்சத்திரம் (அப்போது 20) என்றவாறான அமெரிக்கக் கொடியை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது.
1841 – வில்லியம் ஹென்றி ஹாரிசன் நுரையீரல் அழற்சியினால் காலமானார். பதவியில் இருக்கும் போது இறந்த முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் இவராவார்.
1850 – இங்கிலாந்தின் கொட்டன்ஹாம் என்ற ஊரின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்குப் பயணம் மேற்கொண்டார்.
1866 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாண்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து மயிரிழையில் தப்பினார்.
1905 – இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், காங்ரா, தரம்சாலா ஆகிய இடங்களில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1925 – செருமனியில் எஸ்எஸ் காவல்படை என அழைக்கப்படும் சுத்ஸ்டாப்பெல் அமைக்கப்பட்டது.
1933 – அமெரிக்கக் கடற்படையின் வான்கப்பல் ஏக்ரோன் நியூ செர்சி கரையில் மூழ்கியது.
1939 – இரண்டாம் பைசல் ஈராக்கின் மன்னரானார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய-அமெரிக்கப் படையினரால் புக்கரெஸ்ட் நகர் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் குறைந்தது 3,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் செருமனியில் ஓர்டிரஃப் கட்டாய பணி முகாமை விடுவித்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் அங்கேரியை செருமனியிடம் இருந்து விடுவித்துத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1949 – பனிப்போர்: பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.
1960 – செனிகல், மற்றும் பிரெஞ்சு சூடானை உள்ளடக்கிய மாலி கூட்டமைப்புக்கு விடுதலை தர பிரான்சு ஒப்புக் கொண்டது.
1968 – அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் மெம்பிசு நகரில் யேம்சு ரேய் என்பவனால் படுகொலை செய்யப்பட்டார்.
1968 – நாசாவின் அப்பல்லோ 6 விண்கப்பல் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1969 – மருத்துவர் டெண்டன் கூலி உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.
1973 – உலக வணிக மையத்தின் இரட்டைச் சிகரங்கள் நியூயார்க்கில் திறக்கப்பட்டன.
1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆல்லென் ஆகியோரின் கூட்டில் ஆல்புகெர்க்கியில் தொடங்கப்பட்டது.
1975 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அனாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172 பேர் உயிரிழந்தனர்.
1979 – பாகிஸ்தானின் முன்னாள் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
1981 – ஈரான் – ஈராக் போர்: ஈரான் வான்படை 50 ஈராக்கிய வானூர்திகளைத் தாக்கி அழித்தது.
1983 – சாலஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
1984 – அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்யும் கோரிக்கையை முன்வைத்தார்.
1991 – பென்சில்வேனியாவில் உலங்குவானூர்தி ஒன்று ஆரம்பப் பள்ளி ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த மேலவை உறுப்பினர் ஜோன் ஐன்சு உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
1999 – பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள் உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யுகோசுலாவியா மீது குண்டுகளை வீசின.
2002 – அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
2009 – பிரான்சு நேட்டோ அமைப்பில் மீண்டும் இணைந்தது.
2013 – இந்தியாவின் தானே நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
1846 – ரவுல் பிக்டே, சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 1929)
1855 – மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ.1897)
1889 – மாகன்லால் சதுர்வேதி, இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1968)
1892 – கார்ல் வில்லெம் ரெய்ன்முத், செருமனிய வானியலாளர் (இ. 1979)
1895 – ஜோன் கொத்தலாவலை, இலங்கைப் படைத்துறை அதிகாரி, அரசியல்வாதி (இ. 1980)
1905 – நிரூபன் சக்கரபோர்த்தி, திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் (இ. 2004)
1909 – பி. ஆர். மாணிக்கம், தமிழகக் கட்டடக் கலைஞர் (இ. 1964)
1911 – எடித் கெல்மன், அமெரிக்க வானியலாளர் (இ. 2007)
1912 – கா. ம. வேங்கடராமையா, தமிழகக் கல்வெட்டறிஞர், தமிழறிஞர் (பி. 1912)
1914 – டேவிட் குடால், ஆத்திரேலிய தாவரவியலாளர் (இ. 2018)
1923 – பா. கா. மூக்கைய்யாத்தேவர், தமிழக அரசியல்வாதி (இ. 1979)
1928 – மாயா ஏஞ்சலோ, அமெரிக்கக் கவிஞர் (இ. 2014)
1931 – ரஞ்சன் விஜேரத்ன, இலங்கை அமைச்சர் (இ. 1991)
1934 – குரோனிது இலியூபார்சுகி, உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (இ. 1996)
1948 – அப்துல்லா ஓசுலான், துருக்கிய செயற்பாட்டாளர்
1975 – அக்சய் கண்ணா, இந்தி நடிகர்
1976 – சிம்ரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை.
1979 – கீத் லெட்ஜர், ஆத்திரேலிய நடிகர் (இ. 2008)
இறப்புகள்
397 – அம்புரோசு, உரோமை ஆயர், புனிதர் (பி. 338)
1544 – உருய் உலோபேசு டி வில்லலோபோசு, எசுப்பானிய நாடுகாண் பயணி (பி. 1500)
1617 – ஜான் நேப்பியர், இசுக்கொட்டிய கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1550)
1807 – ஜெரோம் இலாலண்டே, பிரான்சிய வானியலாளர் (பி. 1732)
1841 – வில்லியம் ஹென்றி ஹாரிசன், அமெரிக்காவின் 9வது அரசுத்தலைவர் (பி. 1773)
1846 – ரவுல் பிக்டே, சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 1929)
1919 – பிரான்சிஸ்கோ மார்த்தோ, போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1908)
1929 – கார்ல் பென்ஸ், மெர்சிடிஸ்-பென்ஸ் வாகனத்தை வடிவமைத்த செருமானியப் பொறியியலாளர், தொழிலதிபர் (பி. 1844)
1968 – மார்ட்டின் லூதர் கிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1929)
1972 – காயிதே மில்லத் முகம்மது இசுமாயில், இந்திய முசுலிம் தலைவர் (பி. 1896)
1979 – சுல்பிக்கார் அலி பூட்டோ, பாக்கித்தானின் 4வது அரசுத்தலைவர் (பி. 1928)
1983 – குளோரியா சுவான்சன், அமெரிக்க நடிகை (பி. 1899)
1987 – அக்ஞேய, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1911)
1990 – கி. இலட்சுமண ஐயர், ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர்
2001 – கே. ஆர். கல்யாணராமன், தமிழக எழுத்தாளர் (பி. 1919)
2001 – இலீசி ஒத்தெர்மா, பின்லாந்து வானியலாளர் (பி. 1915)
2012 – கிருஷ்ணா டாவின்சி, தமிழக எழுத்தாளர், நடிகர் (பி. 1968)
சிறப்பு நாள்
குழந்தைகள் நாள் (ஆங்காங், சீனக் குடியரசு)
விடுதலை நாள் (செனிகல், பிரான்சிடம் இருந்து 1960)
அமைதி நாள் (அங்கோலா)
நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்