வெற்றியாளன்

 வெற்றியாளன்

வெற்றியாளன்

தோல்வியை தோளில் போடாதே
துவண்டதை துளிர்க்க விடாதே
கிளை ஒன்று கருகிச் சருகாகலாம்
நிலை அதுவல்ல
மலை போல மரம் இருக்கும்
ஒடிந்து விடும் முருங்கையல்ல-நீ
இடி விழுந்தாலும்
எரிந்திடாத இரும்புத் தூண்-மனதில்
படிந்த பேரிழப்பால்
கடிந்திடலாம் காண்போரை
நொடித்தவர்க்கு ஒவ்வொரு நொடியும் நெடியேறுவது நடக்கும்
அடியோடு அதை மறந்து
முடிந்த வரை முயற்சித்து-மறுபடியும்
மடியும் முன் மகுடம்சூடி
கொடி உறவுக்காரிக்கு
கோடிப் பெருமைகள்
கூடிவரத் தேடிடுவீர்
நாடி அடங்கும் முன்
நாடியதை நடத்திடுவீர்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...